தமிழ்ப்பேரவையின் 113 வது மாத இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி| Dinamalar

தமிழ்ப்பேரவையின் 113 வது மாத இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி

Added : செப் 04, 2022 | |
புவனகிரி: புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் 113 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மொழி நடை மற்றும் ஒலி, ஒளி வேறுபாடு உள்ளிட்ட தன்மைகளை தெரிந்து கொள்கின்றனர். தற்போது 113வது மாத

புவனகிரி: புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் 113 வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.


புவனகிரி தமிழ்ப்பேரவையின் சார்பில் மாதம் தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மொழி நடை மற்றும் ஒலி, ஒளி வேறுபாடு உள்ளிட்ட தன்மைகளை தெரிந்து கொள்கின்றனர்.


தற்போது 113வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. பேரவை தலைவர் வழக்கறிஞர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சங்க இலயக்கிய அமுதம் என்றத்தொடரில், 'ஆவும் ஆனியல்' எனத் தொடங்கும் புறநானுாற்றில் 9 வது பாடல் குறித்து பேராசிரியர் கோகுலாச்சாரியர், திருப்புகழ் அமுதத்தில், திருப்புகழ் 'விடமும் அமுதமும்' எனத்தொடங்கும் 568 வது பாடல் குறித்து பேராசிரியர் அன்பழகன் பேசினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X