சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலி

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நேரிட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். இன்று(செப்., 04) மாலை 3:15 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் சென்றனர். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது நடந்த
CyrusMistry, accident,டாடா குழுமம், சைரஸ் மிஸ்திரி, பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே நேரிட்ட கார் விபத்தில் சிக்கி, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.


latest tamil news


இன்று(செப்., 04) மாலை 3:15 மணியளவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய சைரஸ் மிஸ்திரி, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 3 பேர் சென்றனர். பல்ஹர் பகுதியில் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடந்தது சாலை விபத்து தான் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2012ம் ஆண்டு டாடா குழுமத் தலைவராக நியமிக்கப்பட் சைரஸ் மிஸ்திரி 2016ல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.


latest tamil news



போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், டிரைவர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்து நிகழ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சைரஸ் மிஸ்திரி உடல், அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நடைமுறைகளின்படி, போலீசார் விசாரணை அறிக்கை பதிவு செய்ய உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பிரதமர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: சைரஸ் மிஸ்திரியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிய ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலதிபராக இருந்தார். அவரது மறைவு தொழில்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
சைரஸ் மிஸ்திரி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், மஹாராஷ்டிர மாநில முதல்வர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-202201:54:27 IST Report Abuse
வீரா 100 -110 KM வேகத்துக்கு மேல் இந்திய ரோடுகளில் செல்பவர்களுக்கு எப்போதுமே ஆபத்து காத்து கொண்டுள்ளது.மனைவி குழந்தைகளுடன் நடு ரோட்டில் செல்லும் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் முட்டாள்கள் உள்ளனர். அவர்களால் மற்றவர்களுக்கும் பிரச்சனை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-செப்-202220:05:19 IST Report Abuse
sankaseshan மிஸ்திரி ரத்தன் டாடாவை ஏமாற்ற்ற பார்த்தவன் பிறரை கெடுத்து நல்வாழ்க்கை அடைய முடியாது
Rate this:
Cancel
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
04-செப்-202219:21:10 IST Report Abuse
JaiRam இந்த விபத்தில் நிறைய சந்தேகம் உள்ளது இது திட்டமிட்ட சதியாகவே இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் வியாதிகளை எதிர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
Rate this:
05-செப்-202211:38:45 IST Report Abuse
ஆரூர் ரங்காரை ஓட்டியவரும் உடனிருந்த எல்லோரும் உறவினர்கள்தான். பின்சீட்டில் உட்கார்ந்திருந்தாலும் சீட் பெல்ட் அணியாதது தவறு. 🤫 . முன் சீட்டுகளில் அமர்ந்திருந்த இருவரையும் சீட் பெல்ட் காப்பாற்றி விட்டது . அது ஏர் பேக் கைவிட முக்கியமான பாதுகாப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X