வேணுகோபால சுவாமி கோவிலில் கண்ணன் அவதார விழா நிறைவு

Added : செப் 04, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில், 15 நாட்களாக நடைபெற்ற, கண்ணன் அவதார விழா புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் அவதார விழா 15 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு
வேணுகோபால சுவாமி கோவிலில் கண்ணன் அவதார விழா நிறைவு

காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவிலில், 15 நாட்களாக நடைபெற்ற, கண்ணன் அவதார விழா புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கண்ணன் அவதார விழா 15 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 20ல் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 8:00 மணிக்கு வேணுகோபால சுவாமி பல்வேறு அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், 15வது நாள் நிறைவு நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு பல்வேறு மலர்களால் பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு வேத விற்பன்னர்கள் வாயிலாக புஷ்ப யாகம் நடந்தது.இதனால், சுவாமியின் பாதங்களில் மலர்கள் மலைபோல குவிந்து இருந்தது. விழாவில் பெரிய காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை யதுகுல வேணுகோபால பஜனை மந்திரம் கண்ணன் அவதார விழா குழுவினர் செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X