மகள் மாயம்: தாய் புகார்| Dinamalar

மகள் மாயம்: தாய் புகார்

Added : செப் 04, 2022 | |
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, ஆனந்தவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் செங்கமராஜி மகள் பத்மா, 42. இவருக்கும் திருத்தணி அடுத்த, செங்கமராஜிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் திருமணம் நடந்தது, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 20 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 31ம் தேதி அம்மையார்குப்பத்தில் உள்ள உறவினர்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, ஆனந்தவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் செங்கமராஜி மகள் பத்மா, 42. இவருக்கும் திருத்தணி அடுத்த, செங்கமராஜிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் திருமணம் நடந்தது, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 20 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 31ம் தேதி அம்மையார்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் சாவித்ரி அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



நகை, பணம் திருட்டு



மீஞ்சூர்: நந்தியம்பாக்கம், மகாகவி நகரைச் சேர்ந்தவர் முருகேஷ், 30: தனியார் நிறுவன ஊழியர். இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.நேற்றுமுன்தினம், வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த, 5 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரிந்தது.இது குறித்து, முருகேஷ், நேற்று, மீஞ்சூர் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X