கழிவு நீரை சுத்திகரிக்காத கட்டடங்கள் மீது... கடும் நடவடிக்கை!சாட்டையை சுழற்ற தயாராகிறது வாரியம்| Dinamalar

கழிவு நீரை சுத்திகரிக்காத கட்டடங்கள் மீது... கடும் நடவடிக்கை!சாட்டையை சுழற்ற தயாராகிறது வாரியம்

Updated : செப் 04, 2022 | Added : செப் 04, 2022 | கருத்துகள் (1) | |
தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கவும், கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், 'மல்டி லெவல்' கட்டடங்களில், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பை முறையாக செயல்படுத்த வேண்டும் என, குடிநீர் வாரியம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல உரிமையாளர்கள் அடம் பிடிப்பதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி, அபார

தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கவும், கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காணவும், 'மல்டி லெவல்' கட்டடங்களில், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பை முறையாக செயல்படுத்த வேண்டும் என, குடிநீர் வாரியம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பல உரிமையாளர்கள் அடம் பிடிப்பதால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



சென்னை மாநகராட்சி, அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியுள்ளது. நிர்வாக வசதிக்காக 200 வார்டுகளில் உள்ள 15 மண்டலங்களை, சட்டசபை தொகுதி அடிப்படையில், 23 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.


மொத்த மண்டலங்களில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அதேபோல், 7.92 லட்சம் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன.இதில் வீடுகளுக்கு 7 லட்சம் இணைப்புகள்; கடை, வணிக நிறுவனங்களுக்கு 41 ஆயிரம் இணைப்புகள் மற்றும் வீடு மற்றும் கடைகள் என இரு பயன்பாட்டில், 47 ஆயிரம் இணைப்புகள் உள்ளன.


தரைத்தளம் கொண்ட 2.90 லட்சம் கட்டடங்களில் இணைப்புகள் உள்ளன. அதேபோல், இரண்டடுக்கு 2.55 லட்சம்; மூன்றடுக்கு, 1.46 லட்சம் மற்றும் நான்கு அடுக்கு கட்டடங்களில், 44 ஆயிரம் இணைப்புகள் உள்ளன.மேலும், ஐந்தடுக்கு மற்றும் அதற்கு மேல் கட்டப்பட்ட, 'மல்டி லெவல்' கொண்ட, 54 ஆயிரத்து 948 கட்டடங்களுக்கு கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த கட்டடங்களில் சேரும் கழிப்பறை அல்லாத குளியல் அறை மற்றும் சமையல் அறை நீரை, சுத்திகரித்து, மறு சுழற்சியாக, பூங்கா மற்றும் கழிப்பறையில் 'பிளஸ்' செய்து கழிவுகளை வெளியேற்ற பயன்படுத்த வேண்டும்.


இதற்கு, சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், சி.எம்.டி.ஏ., கட்டுமான அனுமதி வழங்குகிறது.மேலும், இந்த கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்த பிறகு தான், பணி நிறைவு சான்று வழங்குகிறது.


பெரிய 'மால்'கள், அதிக எண்ணிக்கை கொண்ட திரையரங்குகள், பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சில இந்த கட்டமைப்பை முறையாக செயல்படுத்துகின்றன.இதர, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட, 'மல்டி லெவல்' கட்டடங்களில், இந்த கட்டமைப்புகள் முறையாக செயல்படவில்லை என, குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.


latest tamil news



மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டிய கழிவு நீரை, கழிவு நீர் இணைப்பில் விடுகின்றனர். இதனால், குழாய் மற்றும் வெளியேற்று நிலையங்களில் கொள்ளளவை மீறி கழிவு நீர் தேங்குவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இதனால், மல்டி லெவல் கட்டடங்களில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பை முறையாக செயல்படுத்தாத கட்டட உரிமையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, குடிநீர் வாரியம் முடிவு செய்துஉள்ளது.


தண்ணீர் பயன்பாட்டை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக, 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'மல்டி லெவல்' கட்டடங்களில், சுத்திகரிப்பு மறுசுழற்சி கட்டமைப்பை முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறோம். இருந்தும், பெரும்பாலான கட்டட உரிமையாளர்கள் ஒத்துழைப்பதில்லை. அனைத்து கழிவு நீரையும், குழாயில் திருப்பி விடுகின்றனர். இதனால், கழிவு நீர் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது. அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம்.



- குடிநீர் வாரிய அதிகாரிகள்


மழைநீர் வடிகாலில் கழிவு நீரை விட்டால், 5,௦௦௦ முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், திருட்டு குடிநீர் இணைப்பு எடுத்தாலோ அல்லது மோட்டார் வாயிலாக குடிநீரை திருடினாலோ, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, இணைப்பு துண்டிக்கப்படும்.


latest tamil news



மூன்று மாதம், புது இணைப்பு வழங்குவதில்லை. அவசரமாக குடிநீர் இணைப்பு தேவைப் பட்டால், இணைப்பு கட்டணத்துடன், அபராத தொகையை மூன்று மடங்கு செலுத்த வேண்டும். இதற்கு, குடிநீர் வாரியத்தில் விதி உள்ளது. அதேபோன்று, சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்பு இல்லாத 'மல்டி லெவல்' கட்டடங்களுக்கு அபராதம் விதித்து, இணைப்பை துண்டிக்கும் அதிகாரம், வாரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை. திருட்டு குடிநீருக்கு விதிக்கும் தண்டனை போல், இதற்கும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.



- சமூக ஆர்வலர்கள்


- -நமது நிருபர்- -



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X