ராஜேந்திர பிரசாத் சாலை படுமோசம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
பல்லாவரம்:பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறியுள்ளது.பல்லாவரம், குன்றத்துார் சாலையில் இருந்து தெரசா பள்ளி வழியாக ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் ராஜேந்திர பிரசாத் சாலை செல்கிறது. பள்ளி பேருந்துகள், வேன், கார், இருசக்கர வாகனம் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.முக்கியமான இச்சாலை, சமீபகாலமாக
ராஜேந்திர பிரசாத் சாலை படுமோசம்

பல்லாவரம்:பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறியுள்ளது.
பல்லாவரம், குன்றத்துார் சாலையில் இருந்து தெரசா பள்ளி வழியாக ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் ராஜேந்திர பிரசாத் சாலை செல்கிறது. பள்ளி பேருந்துகள், வேன், கார், இருசக்கர வாகனம் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன.
முக்கியமான இச்சாலை, சமீபகாலமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது.இவ்வழியாக செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் நாள்தோறும் பள்ளத்தில் விழுகின்றனர்.

சில நேரங்களில் காயமும் ஏற்படுகிறது. இந்த நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, குட்டைபோல் காணப்படுகிறது.இது தெரியாமல் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களின் நலனை கருத்தில் வைத்து, இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X