17 சதவீதம் கூடுதல் மழை பெய்தும் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை

Added : செப் 05, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான, மூன்று மாதங்களில் 17 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், நிலத்தடி நீர்மட்டத்தில் பெரிய மாற்றமில்லை.தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை, தேனி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என மேற்கு தொடர்ச்சி மலை அதிகமுள்ள மாவட்டங்களில், கூடுதலாக பெய்யும். ஆனால், இம்முறை வட

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான, மூன்று மாதங்களில் 17 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், நிலத்தடி நீர்மட்டத்தில் பெரிய மாற்றமில்லை.

தமிழகத்தில் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை, தேனி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என மேற்கு தொடர்ச்சி மலை அதிகமுள்ள மாவட்டங்களில், கூடுதலாக பெய்யும். ஆனால், இம்முறை வட தமிழகத்தின் மாவட்டங்களிலும் சற்று கூடுதலாக மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 16 நாட்கள் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, ஏரிகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி மற்றும் குளங்களில் நீர் இருப்பு பெரியதாக குறையாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது, ஏரிகள் விரைவாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில், 38.1 செ.மீ., மழை சராசரியாக பெய்துள்ளது. இது வழக்கத்தை காட்டிலும், 17 சதவீதம் அதிகம். கூடுதலாக மழை பெய்தபோதும், நிலத்தடி நீர்மட்டத்தில் பெரிதாக மாற்றமில்லை. பொதுப்பணித்துறை எடுத்த கணக்கெடுப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சராசரி நிலத்தடி நீர்மட்டம், ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் இறுதி வரை, 2 மீட்டரிலிருந்து, 3 மீட்டருக்குள்ளாகவே உள்ளது. இடைப்பட்ட மாதங்களில் நீர்மட்டம் சற்று கூடுதலாகவும், குறைவாகவும் பதிவாகியுள்ளது.

மழை பதிவு விவரம்

காஞ்சி மாவட்டதில் மழை பதிவு விவரம்:ஜூன் - ஆகஸ்ட் இயல்பான மழையளவு - 32.0 செ.மீ.,பெய்த மழையளவு : 38.1 செ.மீ.,கூடுதலாக பெய்த மழையளவு : 17 சதவீதம்




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X