இரவு நேர ரயில் சேவை மீண்டும் துவங்கப்படுமா?

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை : சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவு நேர ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா பாதிப்புக்கு பின், சென்னை புறநகரில் மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூர் தடத்தில், தினமும் நள்ளிரவில் கடைசியாக இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவையும்

சென்னை : சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவு நேர ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு பின், சென்னை புறநகரில் மின்சார ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூர் தடத்தில், தினமும் நள்ளிரவில் கடைசியாக இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவையும் மீண்டும் இயக்கப்படுகின்றன.ஆனால், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் நள்ளிரவு மின்சார ரயில் சேவை இன்னும் துவங்கப்படவில்லை. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:கொரோனா பாதிப்பிற்கு பின், பெரும்பாலான மின்சார ரயில்களின் சேவை துவக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும், நள்ளிரவில் இயக்க வேண்டிய மின்சார ரயில்களின் சேவை, இன்னும் முழு அளவில் இயக்கப்படவில்லை. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் கடைசி ரயில் சேவை இரவு 11:20 மணியோடு முடிந்து விடுகிறது. இதனால், இரவு நேரங்களில் பணியை முடித்து செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.

பயணியர் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்கள், கால்டாக்சிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் நள்ளிரவு 12:15 மணி ரயில் சேவையை மீண்டும் துவங்க, ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X