1,962 விநாயகர் சிலைகள்கடலில் கரைப்பு

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட 1,962 விநாயகர் சிலைகள்,ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைக்க, அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த இடங்களில், மொத்தம், 1,962

சென்னை:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட 1,962 விநாயகர் சிலைகள்,ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைக்க, அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த இடங்களில், மொத்தம், 1,962 சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், 15 ஆயிரம் போலீசார் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர்.
ராயப்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டையில், ஹிந்துக்களுடன் இணைந்து, மாற்று மதத்தினர் சமத்துவ பிள்ளையார் பூஜை செய்து அன்னதானம் வழங்கினர்.ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் சன்னதி தெருவிலும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர், விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதேபோல, புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காவாங்கரை பகுதியிலும், மாற்று மதத்தினர் நடத்திய சமத்துவ விநாயகர் பூஜை நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X