சாலைகளை சீரமைத்து குப்பையை அகற்ற மனு

Added : செப் 05, 2022 | |
Advertisement
புழல்:மழை நீர் வடிகால் பணியால் சேதமடைந்த சாலை மற்றும் தெரு விளக்கு மின் இணைப்புகளை சீரமைத்து, குப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டு, புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில், 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அவற்றில், கடந்தாண்டு முதல் நடக்கும் மழை நீர்

புழல்:மழை நீர் வடிகால் பணியால் சேதமடைந்த சாலை மற்றும் தெரு விளக்கு மின் இணைப்புகளை சீரமைத்து, குப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டு, புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரில், 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அவற்றில், கடந்தாண்டு முதல் நடக்கும் மழை நீர் வடிகால் பணியால், குடிநீர், தெரு விளக்கு மின் இணைப்பு மற்றும் சாலைகள் ஆகியவை சேதமடைந்தன.இந்நிலையில், வடிகால் பணிகள் முடிந்த பகுதிகளில், சேதமடைந்த சாலை, துண்டிக்கப்பட்ட தெரு விளக்கு மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே குப்பையும் தேங்கி, பகுதி முழுக்க சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் மற்றும் மின் வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், இதுவரை முழுமையாக சீரமைக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.அதனால், கடந்த சில மாதமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஓரிரு மாதத்தில் பருவ மழை துவங்கினால், நிலைமை மேலும் மோசமாகும். சீரமைப்பு பணிகளும் கிடப்பில் போய்விடும்.

மேற்கண்ட பணிகளை, மழைக் காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என, புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் குடியிருப்போர் மக்கள் சேவை சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுமட்டுமின்றி, மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம் மற்றும் மண்டல அதிகாரிக்கு, 'மக்கள் குறை தீர்க்க வேண்டும்' என, மனு அளித்து உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X