ராமநாதபுரம் ஊரணிகளில் வரத்துவாய்க்கால்கள் துார்வாரும் பணி

Added : செப் 05, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரியகண்மாயிலிருந்து நகரில் உள்ள ஊரணிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அவ்வழியாக பராமரிக்கப்படாத நீர் வரத்து வாய்க்கால்களை துார்வாரும் பணி மும்முரமாக நடக்கிறது. ராமநாதபுரம் பெரியகண்மாயிருந்து நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக சிதம்பரம்பிள்ளை, நொச்சிவயல், முகவை, லட்சுமிபுரம் ஆகிய ஊரணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது
ராமநாதபுரம் ஊரணிகளில் வரத்துவாய்க்கால்கள் துார்வாரும் பணி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரியகண்மாயிலிருந்து நகரில் உள்ள ஊரணிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அவ்வழியாக பராமரிக்கப்படாத நீர் வரத்து வாய்க்கால்களை துார்வாரும் பணி மும்முரமாக நடக்கிறது.

ராமநாதபுரம் பெரியகண்மாயிருந்து நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக சிதம்பரம்பிள்ளை, நொச்சிவயல், முகவை, லட்சுமிபுரம் ஆகிய ஊரணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாகும். இவ்வாண்டு முன்கூட்டியே தற்போது பெரியகண்மாய்க்கு வைகை தண்ணீர் வரத்தால் 6.5 அடி மொத்தம் 7.5அடி) தண்ணீர் உள்ளது. இதனையடுத்து உபரிநீர் தென்கலுங்கு, வடகிலுங்கு வழியாக திறந்து விடப்படுகிறது.

இதுபோக பெரியகண்மாய் தண்ணீரை சிதம்பரம் பிள்ளை, முகவை, நீலகண்டி ஆகிய ஊரணிகளுக்கு கண்மாய் நீரை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ேஷக்மன்சூர், நகராட்சி தலைவர் கார்மேகம், கவுன்சிலர்களுடன் ஊரணி வரத்துவாய்க்கால் பணிகளை ஆய்வு செய்தனர். பெரியகண்மாய் தண்ணீர் மூலம் நகரில் உள்ள ஊரணிகளை படிப்படியாக நிரப்ப உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X