கண்மாயில் சவடுமண் அள்ளும் பகுதியில் தாசில்தார் களஆய்வு

Added : செப் 05, 2022 | |
Advertisement
முதுகுளத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக, முதுகுளத்தூர் கண்மாயில் சவடுமண் அள்ளும் பகுதிகளில் தாசில்தார் சிவக்குமார் நேரில் களஆய்வு செய்தார்.முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிலர் தாசில்தாரிடம் முறையாக அனுமதி கடிதம் பெற்று கண்மாய் சவடுமண் அள்ளி செல்கின்றனர். முதுகுளத்தூர் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க விவசாய நிலங்களில்

முதுகுளத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக, முதுகுளத்தூர் கண்மாயில் சவடுமண் அள்ளும் பகுதிகளில் தாசில்தார் சிவக்குமார் நேரில் களஆய்வு செய்தார்.

முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிலர் தாசில்தாரிடம் முறையாக அனுமதி கடிதம் பெற்று கண்மாய் சவடுமண் அள்ளி செல்கின்றனர். முதுகுளத்தூர் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க விவசாய நிலங்களில் சவடுமண் கொட்டி வருகின்றனர். கண்மாய் ஒரே இடத்தில் அதிகமான ஆழத்தில் தோண்டப்படுவதால் பள்ளம் ஏற்பட்டுஉள்ளது. சிலர் வியாபார நோக்கத்தில் டிராக்டர்களில் சவடுமண் கொட்டுவதற்காக சம்மந்தபட்ட இடத்திற்கு வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செப்.1ல் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக முதுகுளத்தூர் கண்மாய் சவடுமண் அள்ளும் பகுதியில் தாசில்தார் சிவக்குமார் நேரில் களஆய்வு செய்தார்.ஒரே இடத்தில் ஆழமாக சவடுமண் எடுக்ககூடாது எனவும், டிராக்டரில் வேகமாக செல்லக்கூடாது எனவும் தாசில்தார் எச்சரித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X