தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு; நிலை தடுமாறும் வாகன ஓட்டிகள்

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சரியான திட்டமிடுதல், போதிய இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களால் விபத்துக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது. இதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கண் மருத்துவமனைக்கு
தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு; நிலை தடுமாறும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சரியான திட்டமிடுதல், போதிய இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களால் விபத்துக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது.

இதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கண் மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள், சிகிச்சை பெறுவோர் ரோட்டை கடக்க வசதியாக பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இவை சரியான திட்டமிடுதல் இல்லாமலும், போதிய இடைவெளி இல்லாமல் அருகருகே எதிரும், புதிருமாக வைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் வரும்போது டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.பல நேரங்களில் பொது மக்கள் நடந்து செல்லும் மண் பாதையையும் அடைக்கும் வகையில் பேரிகார்டுகள் வைக்கப்படுவதால், டூவீலர் வாகன ஓட்டிகள் பேரிக்கார்டை கடந்து செல்லும்போது கனரக வாகனங்களால் விபத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது.

இரு வாரம் முன், இங்கு அரசு பஸ் மோதி டூவீலரில் வந்தவர் உயிரிழந்தார். அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தை அறியாத வெளியூர் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.எனவே இந்த பேரிகார்டுகளை அகற்றி போக்குவரத்து வசதியை மேம்படுத்த கிருஷ்ணன்கோவில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X