குடிநீர் சப்ளையில் பாரபட்சம்; இருளில் மூழ்கிய தெருக்கள்; தவிக்கும் விருதுநகர் 36வது வார்டு மக்கள்

Added : செப் 05, 2022 | |
Advertisement
விருதுநகர் : குடிநீர் சப்ளையில் பாரபட்சம், தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் தடுக்கி விழும் மக்கள், தெரு ஆக்கிரமிப்புகள் என தவியாய் தவிக்கின்றனர் 36வது வார்டு விருதுநகர் அல்லம்பட்டி மக்கள்.நகராட்சியின் 36வது வார்டில் அல்லம்பட்டி முத்துராமன் பட்டி பகுதி சங்கரநாராயணபுரம் தெரு, சவுண்டி தெருவில் மூன்று தெருக்கள் அடங்கும். இங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர்
குடிநீர் சப்ளையில் பாரபட்சம்; இருளில் மூழ்கிய தெருக்கள்; தவிக்கும் விருதுநகர் 36வது வார்டு மக்கள்

விருதுநகர் : குடிநீர் சப்ளையில் பாரபட்சம், தெருவிளக்கு வசதிகள் இல்லாததால் தடுக்கி விழும் மக்கள், தெரு ஆக்கிரமிப்புகள் என தவியாய் தவிக்கின்றனர் 36வது வார்டு விருதுநகர் அல்லம்பட்டி மக்கள்.

நகராட்சியின் 36வது வார்டில் அல்லம்பட்டி முத்துராமன் பட்டி பகுதி சங்கரநாராயணபுரம் தெரு, சவுண்டி தெருவில் மூன்று தெருக்கள் அடங்கும். இங்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் சரிவர கிடைப்பது இல்லை. 2 மாதம் முன் குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழி தற்போது வரை அப்படியே கிடக்கிறது.மேலும் இதனால் பொதுமக்களே வீட்டுக்கு வீடு மோட்டார்கள் வைத்து குடிநீரை எடுப்பதால் மேடான பகுதிக்கு தண்ணீர் வருவது இல்லை. குடிநீர் திருட்டு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் குடிநீர் வழங்க போர்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ கூட வரமுடியாத சூழல், போதிய தெருவிளக்கு இல்லாததால் இருளில் பெண்கள், முதியோர் தடுக்கி விழும் அவல நிலை உள்ளது. பணி முடிந்து இரவு வீடு திரும்புவோர் சிரமப்படுகின்றனர்.ஆகவே நகராட்சி நிர்வாகம் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தெருவிளக்கு வசதி இல்லாததால் நடமாட அச்சப்படும் சூழல் உள்ளது. குழந்தைகளை மாலை 6:00 மணிக்கு மேல் வெளியில் விளையாட கூட அனுப்ப முடியவில்லை. போதிய தெருவிளக்கு வசதிகள் செய்து தர வேண்டும்.- ராஜலட்சுமி, குடும்பத்தலைவி.

தெருவிளக்கு வசதி வேண்டும்



எங்கள் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. அதையும் பெரும்பாலானோர் மோட்டார் போட்டு உறிஞ்சி விடுகின்றனர். 2 மணி நேரம் சப்ளை செய்யப்படும் குடிநீர், எங்களுக்கு அரை மணிநேரம் தான் கிடைக்கிறது.- ஜெபா கிறிஸ்டி, குடும்பத்தலைவி.குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம். ஒரு குடம் குடிநீர் ரூ.13க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். இதை ஏழைகள் வாங்க முடியவில்லை. சப்ளை செய்யப்படும் குடிநீரும் மிகவும் குறுகிய நேரத்தில் மட்டுமே வருகிறது.- - பாக்கிய லட்சுமி, குடும்பத்தலைவி.

திண்டாடுகிறோம்



திண்டாடுகிறோம்

குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம். ஒரு குடம் குடிநீர் ரூ.13க்கு விலை வாங்கி பயன்படுத்துகிறோம். இதை ஏழைகள் வாங்க முடியவில்லை. சப்ளை செய்யப்படும் குடிநீரும் மிகவும் குறுகிய நேரத்தில் மட்டுமே வருகிறது.- பாக்கிய லட்சுமி, குடும்பத்தலைவி.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X