ஆடுகளுக்கு பரவி வருகிறது புது நோய்

Added : செப் 05, 2022 | |
Advertisement
பேரையூர் : பேரையூர் பகுதியில் ஆடுகளுக்கு புதுவித நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் கலக்கத்தில் உள்ளனர்.செம்மறி ஆடுகளுக்கு வாய்ப்புண் மற்றும் காலில் புண்கள் ஏற்பட்டு தீவனம் சாப்பிடாமல் நடக்க முடியாமல் இருந்து வருகின்றன. ஆடுகள் உணவு சாப்பிடாமல் குன்றி இறந்து போக வாய்ப்புள்ளது.பேரையூர் கணேசன் கூறியதாவது: 300 ஆடுகளை வளர்த்து வருகிறேன். தற்போது ஆடுகளுக்கு வாயில்

பேரையூர் : பேரையூர் பகுதியில் ஆடுகளுக்கு புதுவித நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் கலக்கத்தில் உள்ளனர்.

செம்மறி ஆடுகளுக்கு வாய்ப்புண் மற்றும் காலில் புண்கள் ஏற்பட்டு தீவனம் சாப்பிடாமல் நடக்க முடியாமல் இருந்து வருகின்றன. ஆடுகள் உணவு சாப்பிடாமல் குன்றி இறந்து போக வாய்ப்புள்ளது.பேரையூர் கணேசன் கூறியதாவது: 300 ஆடுகளை வளர்த்து வருகிறேன். தற்போது ஆடுகளுக்கு வாயில் புண் ஏற்பட்டு இரை சாப்பிடாமல் குன்றி போய் உள்ளது.

துறையூரில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகளுக்கு வாயில் புண் ஏற்பட்டு குன்றிப் போய் உள்ளன.மருந்தும் மாத்திரைகளும் கிடைக்கவில்லை. அதனால் எலுமிச்சை பழத்தை கொண்டு ஆடுகளின் வாயை சுத்தம் செய்து வருகிறோம். அரசு மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கவேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X