மதுரை : 'தசைநார் சிதைவு நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து புதிய மருந்து கண்டுபிடித்துள்ளோம்' என, மதுரை ஜெய்கேர் நிறுவனத்தின் குழந்தை நரம்பியல் டாக்டர் ராகவன் கூறினார்.
மதுரை ஜெய்கேர் நிறுவனத்தில்சர்வதேச கருத்தரங்கு நடந்தது. ஜெய்கேர் நிறுவன இயக்குனர்வர்கீஸ் ஆண்டனி, ஜப்பான் தேசிய நரம்பியல் மருத்துவ மைய இயக்குனர்யோஷிட்சுகு ஆக்கி, வியட்நாம் வின் பல்கலை மருத்துவ இயக்குனர் நுயென் தான் லியெம், டான்சானியா டோடோமா பல்கலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஹென்றி ஹம்பா, பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் பிரபு காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
டாக்டர் ராகவன் கூறியதாவது: பொதுவாக தசைநார் சிதைவு நோய் ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். இதற்கு அடிப்படை காரணம் மரபணு குறைபாடு. இந்நோயை முழுமையாக குணப்படுத்த சிகிச்சை முறைகள்இல்லை. மரபணு சிகிச்சை முறை மூலம் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடிந்தாலும், அதற்கான செலவுகள் அதிகம்.
இந்த நோயால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு தீர்வு காண ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து அன்றாட உணவுப்பொருளில் இருக்கும் 'பீட்டா குளுக்கான்' களை வைத்து மருந்தை கண்டுபிடித்துள்ளோம். சோதனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஜப்பான் அரசிடமும், இந்திய அரசிடமும் உதவி கேட்டுள்ளோம், என்றார்.
Advertisement