தாய்க்கு தங்கம்... மகளுக்கு வெண்கலம்! தூக்குவதில் அசத்தும் வீராங்கனைகள்

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | |
Advertisement
சமீபத்தில் நடந்த மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டியில், கோவையை சேர்ந்த பெண், மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கமும்; இவரது மகள் வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.கோவை, குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, 40. இவரது கணவர் ரமேஷ் கூலி தொழிலாளி. மாசிலாமணி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமென்கிற ஆர்வம், நீண்ட
தாய்க்கு தங்கம்... மகளுக்கு வெண்கலம்! தூக்குவதில் அசத்தும் வீராங்கனைகள்

சமீபத்தில் நடந்த மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டியில், கோவையை சேர்ந்த பெண், மாஸ்டர் பிரிவில் தங்கப்பதக்கமும்; இவரது மகள் வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

கோவை, குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, 40. இவரது கணவர் ரமேஷ் கூலி தொழிலாளி. மாசிலாமணி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டுமென்கிற ஆர்வம், நீண்ட நாட்களாக உண்டு.பின்னர், அப்பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் வலுதுாக்கும் பயிற்சியை துவங்கினார். வேலை முடித்து விட்டு, ஓய்வு நேரங்களில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். பிறகு வலுதுாக்குதலில் ஆர்வத்தின் காரணமாக, கடுமையான பயிற்சி மேற்கொண்டார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், திருச்சியில் மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டி நடந்தது. மாஸ்டர் பிரிவில் பங்கேற்ற மாசிலாமணி, 77.5 கிலோ துாக்கி தங்கம் வென்று அசத்தினார். இவரது, 17 வயது மகள் தாரணி, 47 கிலோ பிரிவில் பங்கேற்று, 72.5 கிலோ எடை துாக்கி வெண்கல பதக்கம் வென்றார். தொடர்ந்து வரும், 14ம் முதல் 19ம் தேதி வரை சென்னையில் நடக்கவுள்ள தென்னிந்திய வலுதுாக்கும் போட்டிக்கு தாயும், மகளும் தேர்வாகி அசத்தியுள்ளனர்.வலுதுாக்கும் வீராங்கனை மாசிலாமணி கூறுகையில், ''சிறு வயதிலிருந்தே விளையாட்டில் சாதனை படைக்க வேண்டுமென்கிற ஆர்வம் எனக்கு உண்டு. ஆனால், எனது அதிக உடல் எடை தடையாக இருந்தது. அருகில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சியாளர் அறிவுறுத்தலின் படி, வலுதுாக்கும் போட்டியில் முறையான பயிற்சியை துவங்கினேன். அரசு பள்ளியில் படிக்கும் எனது மகளும், வலுதுாக்கும் பயிற்சியை துவக்கினாள். முதலில் பயிற்சிக்கு செல்லும் போது, அனைவரும் நகைச்சுவையாக பேசுவது உண்டு. வெற்றிக்கு பிறகு அனைவரிடம் வாய்க்கு பூட்டு போட்டது போல் உள்ளது. தொடர் பயிற்சியின் மூலம் தென்னிய போட்டியில் வெற்றிக்காக பாடுபடுவேன்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X