பள்ளி கல்வி பாடப்புத்தகத்தில் சாவர்க்கர்

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை : ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கர் பற்றிய தகவல்கள், தமிழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பின், பள்ளி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பல்வேறு வரலாற்று தகவல்களை புதுப்பித்தனர்.இதன்படி, பள்ளி பாடப் புத்தகங்களும், இந்த கல்வி ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.இதன் ஒரு பகுதியாக, எட்டாம்
பள்ளி கல்வி, சாவர்க்கர், தமிழக பாடத்திட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை : ஹிந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சாவர்க்கர் பற்றிய தகவல்கள், தமிழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பின், பள்ளி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

பல்வேறு வரலாற்று தகவல்களை புதுப்பித்தனர்.இதன்படி, பள்ளி பாடப் புத்தகங்களும், இந்த கல்வி ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.இதன் ஒரு பகுதியாக, எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், ஹிந்து மகா சபை முன்னாள் தலைவரும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் முன்னோடியுமாக கருதப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய குறிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



சமூக அறிவியல் புத்தகத்தின், வரலாறு பாடத்தின் நான்காம் அலகில், 46ம் பக்கத்தில், 'மக்கள் புரட்சி' என்ற பாடத்தில், 'வேலுார் கலகம்' என்ற தலைப்பில், பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.'வெள்ளையர்களை எதிர்த்து, 1806ல் நடந்த வேலுார் கலகமானது, 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போரின் முன்னோடி என, வி.டி.சாவர்க்கர் என்ற வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்' என, கூறப்பட்டுள்ளது.

அதே பாடத்தில், 'பெரும் புரட்சி' என்ற பெயரில், சிப்பாய் கலகம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 49ம் பக்கத்தில், சாவர்க்கர் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. 'சிப்பாய் கலகம் என்ற பெரும் புரட்சி, நவீன தேசிய இயக்கம் தோன்ற காரணமாக இருந்தது. 1857ம் ஆண்டு நடந்த பெரும் புரட்சி, இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கமாக இருந்தது. 'வி.டி.சாவர்க்கர் எழுதிய, முதல் இந்திய சுதந்திர போர் என்ற நுாலில், பெரும் புரட்சியை, ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் என விவரிக்கிறார்' என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தை, முதல் இந்திய சுதந்திர போர் என்றும், அதற்கு, 1806ல் நடந்த வேலுார் கலகமே முன்னோடி என்றும் சாவர்க்கர் கூறியுள்ளதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.இந்த கருத்துகள் பொய் என, தி.மு.க., அப்போது எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது, தி.மு.க., ஆட்சி அமைந்த பின், சாவர்க்கர் கூறிய தகவல பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.கர்நாடக பாட புத்தகங்களில், சாவர்க்கர் குறித்த தகவல்களை திணிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், தமிழகத்தில் சாவர்க்கரின் கருத்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X