குறுமைய கேரம் போட்டியில் கலக்கல்:வச்ச குறி தப்பாது!

Added : செப் 05, 2022 | |
Advertisement
கோவை,:நவ இந்தியா, ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்த 'ஆ' குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டியில், மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கோவை கல்வி மாவட்டம், 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கேரம் மற்றும் பூப்பந்து விளையாட்டு போட்டிகள், இளங்கோ மெட்ரிக்., பள்ளி சார்பில், ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்தது.மாணவர்கள் பிரிவு :14 வயது
குறுமைய கேரம் போட்டியில் கலக்கல்:வச்ச குறி தப்பாது!

கோவை,:நவ இந்தியா, ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்த 'ஆ' குறுமையத்துக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டியில், மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.கோவை கல்வி மாவட்டம், 'ஆ' குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான கேரம் மற்றும் பூப்பந்து விளையாட்டு போட்டிகள், இளங்கோ மெட்ரிக்., பள்ளி சார்பில், ராமகிருஷ்ணா பள்ளியில் நடந்தது.மாணவர்கள் பிரிவு :14 வயது ஒற்றையர் பிரிவில், சி.எஸ்.ஐ., மெட்ரிக்., பள்ளி அணி முதலிடம்; கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது. இரட்டையர் பிரிவில், ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி அணி, முதலிடம் மற்றும் பி.ஆர்., சித்தா நாயுடு பள்ளி அணி இரண்டாம் இடமும் பிடித்தன.17 வயது ஒற்றையர் பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளி அணி முதலிடம், ராமகிருஷ்ணா பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. இரட்டையர் பிரிவில், பி.ஆர்., சித்தா நாயுடு பள்ளி அணி முதலிடம், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.19 வயது ஒற்றையர் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி அரசு பள்ளி முதலிடமும், ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி இரண்டாமிடமும்; இரட்டையர் பிரிவில், சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி அணி மற்றும் பி.ஆர்., சித்தா நாயுடு பள்ளி அணி முதல் இரண்டு இடங்களை பிடித்தன.மாணவியர் பிரிவு :14 வயது ஒற்றையர் பிரிவில், சி.எஸ்.ஐ., மெட்ரிக்., பள்ளி அணி, முதலிடம், ராமகிருஷ்ணா பள்ளி அணி இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில், கணபதி அரசு பள்ளி அணி முதலிடம், நிர்மலா மெட்ரிக் பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தன.17 வயது ஒற்றையர் பிரிவில் பி.ஆர்., சித்தா நாயுடு பள்ளி அணி மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அணி முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தன. இரட்டையர் பிரிவில், கணபதி அரசு பள்ளி அணி, முதலிடம் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.19 வயது ஒற்றையர் பிரிவில், ஆர்.கே,. புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், நிர்மலா மெட்ரிக்., பள்ளி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. இரட்டையர் பிரிவில், ஆர்.கே., புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஸ்டேன்ஸ் பள்ளி அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.இப்போட்டியில், முதல் இடம் பிடித்த மாணவ - மாணவிகள் ஒருங்கிணைந்த குறுமைய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X