மாநில பளுதூக்கும் போட்டி:அசத்திய வீராங்கனைகள்

Added : செப் 05, 2022 | |
Advertisement
கோவை:சூலுார், ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான 'டெட்லிப்ட்' ( பளு துாக்குதலில் ஒரு பிரிவு) போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர்.கோவை அமெச்சூர் பளுதுாக்குதல் சங்கம் மற்றும் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான டெட்லிப்ட் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.போட்டியை கல்லுாரி முதல்வர்,

கோவை:சூலுார், ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான 'டெட்லிப்ட்' ( பளு துாக்குதலில் ஒரு பிரிவு) போட்டியில், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர்.கோவை அமெச்சூர் பளுதுாக்குதல் சங்கம் மற்றும் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், முதலாம் ஆண்டு மாநில அளவிலான டெட்லிப்ட் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.போட்டியை கல்லுாரி முதல்வர், சிவகுமார் துவக்கி வைத்தார். போட்டியில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.நேற்று நடந்த பெண்கள் பிரிவு போட்டி முடிவுகள்: 57 கிலோ எடைக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் கோவை மாவட்ட வீராங்கனை கவிதா, 115கிலோ எடை துாக்கி முதலிடத்தையும்; கோவையை சேர்ந்த பிரியதர்சினி, 110 கிலோ துாக்கி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 69கிலோ எடை பிரிவில், கோவை கிருத்திகா, 125 கிலோ துாக்கி முதலிடம்; கோவை மனோன்மணி 110 கிலோ எடை துாக்கி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.76 கிலோ எடை பிரிவில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, 110 கிலோ துாக்கி முதலிடத்தையும்; கோவை மிர்துலா 100 கிலோ துாக்கி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 76+ கிலோ பிரிவில், திருப்பூர் ஜெயஸ்ரீ 155 கிலோ எடை துாக்கி முதலிடத்தையும், கோவை சித்திரை செல்வி 135 கிலோ எடை துாக்கி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X