திட்ட அனுமதிக்காக காத்திருப்பு :மருதமலையில் லிப்ட்!

Added : செப் 05, 2022 | |
Advertisement
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 'லிப்ட்' அமைக்கும் பணி இழுபறியாக உள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும், பக்தர்கள் மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 'லிப்ட்' அமைக்கும் பணி இழுபறியாக உள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும், பக்தர்கள் மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு சென்று வருகின்றனர்.மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து, ராஜகோபுரம் மற்றும் பழைய மலைப்பாதை என, இரு வழிகளிலும், படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து, 'ரோப்கார்' அமைக்க கோரிக்கை எழுந்தது. கடந்த ஆட்சியில், மருதமலை கார் பார்க்கிங் பகுதியில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு, லிப்ட் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மருதமலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து; லிப்ட் திட்டத்தில், சில மாற்றங்களை கூறினார். ஆனால், லிப்ட் அமைக்கும் பணியில் இழுபறி நீடிக்கிறது. இதுகுறித்து மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில், ''மருதமலையில், லிப்ட் அமைக்கும் திட்டத்தில், பக்தர்களின் வசதிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, திட்ட அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் திட்ட அனுமதி கிடைத்து, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும்,"என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X