சிட்டி கிரைம்: கொள்ளையர்களுக்கு வலை | Dinamalar

சிட்டி கிரைம்: கொள்ளையர்களுக்கு வலை

Added : செப் 05, 2022 | |
சரவணம்பட்டி ஆர்.ஆர்.ஸ்வரா அபார்ட்மென்டில் வசிப்பவர் உஷா நந்தினி, 48. சிவானந்தபுரத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இருவர், உஷா நந்தினி அணிந்திழுந்த தங்கச்சங்கிலியை பற்றி இழுக்க முயற்சித்தனர். இதில் நிலை தடுமாறிய அவர், சாலையில் கீழே விழுந்தார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள்,

சரவணம்பட்டி ஆர்.ஆர்.ஸ்வரா அபார்ட்மென்டில் வசிப்பவர் உஷா நந்தினி, 48. சிவானந்தபுரத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இரு சக்கர வாகனத்தில் கடைக்கு சென்றபோது, பின் தொடர்ந்து வந்த இருவர், உஷா நந்தினி அணிந்திழுந்த தங்கச்சங்கிலியை பற்றி இழுக்க முயற்சித்தனர். இதில் நிலை தடுமாறிய அவர், சாலையில் கீழே விழுந்தார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், நகை பறிக்க முயற்சித்த இருவரும் தப்பி விட்டனர். சிசிடிவி., காட்சிகளை ஆதாரமாக கொண்டு நகை பறிக்க முயற்சியில் ஈடுபட்ட இருவரையும் சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


சிறுவர்கள் மாயம்


ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் போன்ற இடங்களில் இருந்து மீட்கப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், உக்கடம் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். இவ்வாறு தங்கி இருந்த 17 வயது வயது சிறுவர்கள் இருவர், கடந்த 3ம் தேதி காலை 8:00 மணிக்கு தப்பிச் சென்று விட்டனர். அன்பு இல்ல மேலாளர் பாலமுருகன் புகார்படி கடைவீதி போலீசார் விசாரிக்கின்றனர்.


போலீசில் சிக்கிய ரவுடி





கோவில் மேடு நெசவாளர் காலனியை சேர்ந்தவன் கார்த்தி, 23. கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்ட இவன், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டிருந்தான். இவன் மீது சாய்பாபா காலனி ஸ்டேஷனில் 5 குற்ற வழக்குகளும், ஆர்.எஸ்.புரம், துடியலுாரில் தலா ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் சாய்பாபா காலனி மருது கோனார் சந்திப்பில் நடந்து சென்ற ஹோட்டல் ஊழியர் இளங்கோவன், 26, என்பவரை தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் கார்த்தி ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X