மழை வந்தால் குளமாகும் குடியிருப்பு பகுதி!

Added : செப் 05, 2022 | |
Advertisement
விஷஜந்துக்கள் தொல்லைமாநகராட்சிக்குட்பட்ட, 90வது வார்டு, சரஸ்வதி நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால், அருகில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இப்பகுதியை சுத்தம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரபாகரன், கோவைபுதுார்.கால்நடைகளால்
மழை வந்தால் குளமாகும் குடியிருப்பு பகுதி!

விஷஜந்துக்கள் தொல்லை

மாநகராட்சிக்குட்பட்ட, 90வது வார்டு, சரஸ்வதி நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர் சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால், அருகில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். இப்பகுதியை சுத்தம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரபாகரன், கோவைபுதுார்.


கால்நடைகளால் அவதி


தெலுங்குபாளையம், பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி., காலனி காவல் நிலையம் முன் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக கால்நடைகள் ரோட்டிலேயே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.-பிரேம்குமார், தெலுங்குபாளையம்.


வாகன நெரிசல்


தொண்டாமுத்துர் டூ பேரூர் செல்லும் வழியில் சாலை தோண்டப்பட்டுள்ளதால், ஒரு பக்கம் மட்டுமே வாகனங்கள் செல்ல வழியுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.-ஹரிஷ் குமார், தொண்டாமுத்துார்.


வீணாகும் தண்ணீர்


மாநகராட்சி, 45வது வார்டு, கே.கே.புதுார் கிருஷ்ணா நகரில் பிளாஸ்டிக் பைப் உடைந்து, தினமும் தண்ணீர் வீணாகிறது. பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. - கண்ணன், கே.கே புதுார்.


மோசமான சாலை


நவ இந்தியா சிக்னல் முதல் காந்திபுரம் மேம்பாலம் வரையுள்ள, ராஜேந்திர பிரசாத் சாலை, மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனங்கள் ஓட்டிகள் செல்வதே பெரிய சவாலாக உள்ளது. - அசோக், காந்திபுரம்.


வேகத்தடையால் விபத்து அபயாம்


குறிச்சி குளக்கறை, பொங்காளியம்மன் கோவில் அருகில் விபத்தை தடுக்க நான்கு வேக தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேக தடை அடையாள குறிகள் இல்லாமலும் தெரு விளக்குகள் இன்றி இருட்டாகவே இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. -சிவகுமார்,

எம்.ஜி.ஆர்., நகர்.


சேறும் சகதியும்


சிங்காநல்லுார் அருகில் உள்ள லட்சுமணன் நகரில் உள்ள சாலை கடந்த ஒரு வருடமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. பலர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முரளி,

லட்சுமணன் நகர்.


சாலையில் குளம்


மாநகராட்சி 65வது வார்டு, ஒலம்பஸ் 80 அடி சாலையில் மழை வந்தால், குடியிருப்புகள் முன் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. முறையான மழைநீர் வடிகால் அமைத்துத்தர வேண்டும்.-அருண், ஒலம்பஸ்.


தெரு நாய்கள்




தொல்லை


வெள்ளக்கிணறு, வார்டு-2, சவுடாம்பிகா நகரில் தெரு நாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. சாலையில் செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜா, வெள்ளக்கிணறு.


மழையால் சாலை சேதம்


சிட்கோ, அன்னை இந்திரா நகர், 3வது வீதியில் மழை பெய்ததில் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது; சாலை சேறும் சகதியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகள் வழுக்கி விழுகின்றனர். அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.- சந்தியா,

இந்திரா நகர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X