மாநில நல்லாசிரியர் விருதுக்கு இரு ஆசிரியர்கள் தேர்வு

Added : செப் 05, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நல்லாசிரியர் விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கணினி ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெயக்குமார். இவர், கடந்த, 14 ஆண்டுகளாக கணினி அறிவியல் பாடத்தில் தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்துள்ளார்.தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கவிதை
மாநில நல்லாசிரியர் விருதுக்கு இரு ஆசிரியர்கள் தேர்வு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நல்லாசிரியர் விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி, ஆனைமலை வி.ஆர்.டி., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கணினி ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெயக்குமார். இவர், கடந்த, 14 ஆண்டுகளாக கணினி அறிவியல் பாடத்தில் தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்துள்ளார்.தொடர்ந்து, பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கவிதை புத்தகங்களும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆசிரியர் ஜெயக்குமார் கூறியதாவது:பள்ளி மாணவியர் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன். அதில், அன்புள்ள துாய்மையே என மாணவர்கள் குறும்படம் எடுக்க உதவி செய்துள்ளேன்.கடந்தாண்டு, 12 ஆயிரம் ரூபாய்க்கு மாணவர்களுக்கு வினா வங்கி நகல் எடுத்துக்கொடுத்துள்ளேன். பில்சின்னாம்பாளையம் அறிவுசோலை கல்வி விழிப்புணர்வு மையத்தோடு இணைந்து, திருவள்ளுவர் தினத்தை கொண்டாடுவதுடன், மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்க துணையாக இருந்துள்ளேன்.நவீன படிகள் படிப்பகம் வாயிலாக, பொது நுாலகம் அமைத்துள்ளேன். இது போன்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


கோட்டூர்


கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதுகலை ஆசிரியராக (விலங்கியல்) பணியாற்றுபவர் சிவக்குமார், 51. இவர், மாணவிகளின் கல்வி, தனித்திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, தன்னார்வலர்களுடன் இணைந்து பள்ளியில் பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறார்.பள்ளி முடித்து செல்லும் மாணவிகளில், பெற்றோர் இல்லாத மாணவிகளின் மேல்படிப்புக்கு உதவி வருகிறார். பெண்கள் கல்வி முன்னேற்றத்துக்கான இவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது.விருதுக்கு தேர்வானது குறித்து சிவக்குமார் கூறுகையில், ''அரசுப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து, 16 ஆண்டுகளாகிறது. கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் அதிக உத்வேகத்துடன் பணியாற்ற இந்த விருது ஊக்கமளிக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X