கொரோனா பரிசோதனை சான்றில் குளறுபடி: முறையாக கண்காணிக்க வலியுறுத்தல்

Added : செப் 05, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கொரோனா பரிசோதனை சான்றிதழில் விபரங்கள் குளறுபடியாக இருந்ததால், பெற்றோர் குழப்படைந்துள்ளனர். இதுபோன்ற, தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்று கண்டறியும் வகையில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.இந்த

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கொரோனா பரிசோதனை சான்றிதழில் விபரங்கள் குளறுபடியாக இருந்ததால், பெற்றோர் குழப்படைந்துள்ளனர். இதுபோன்ற, தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக அரசு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்று கண்டறியும் வகையில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.இந்த பரிசோதனைக்காக மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, கோவைக்கு அனுப்பப்படுகிறது. பரிசோதனை செய்து கொள்ளும் நபர்களின் பெயர், வயது, முகவரி, மொபைல்போன் எண் உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த, 12வயது சிறுமிக்கு, வி.காளியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.சான்றிதழில், சிறுமிக்கு வயது, 12க்கு பதிலாக, 85 என்றும், வேட்டைக்காரன்புதுார் முகவரிக்கு பதிலாக, தேவிபட்டணம் முகவரியும் பதிவாகி வந்ததால், பெற்றோர் குழப்பமடைந்தனர். இது குறித்து பெற்றோர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து சரி செய்யுமாறு வலியுறுத்தினர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கொரோனா பரிசோதனை செய்பவர்களின் விபரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். முகவரி மாற்றம் உள்ளிட்டவையால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். ஊழியர்களின் கவனக்குறைவால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.'ஆன்லைன்' செயலியில், தகவல்கலை பதிவேற்றம் செய்யும் போது, அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்த பின் பதிவேற்றம் செய்ய வேண்டும்,' என்றனர்.வி.காளியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கூறுகையில், 'ஆன்லைன் வாயிலாக செயலியில் பதிவேற்றம் செய்யும் போது, தொழில்நுட்ப தவறு ஏற்பட்டு இருக்கலாம்.இணையதள வேகம் குறைவாக இருக்கும் போது, செயலி சரியாக செயல்படுவதில்லை. இதுபோன்ற நேரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மாற்றாக புதியதாக மீண்டும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். தொழில்நுட்ப தவறு தான் காரணமாகும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X