ரயில் வசதிகள் மேம்படுத்தஎம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : செப் 05, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:''கிணத்துக்கடவு வழித்தடத்தில் ரயில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., தாமோதரன் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், பல்வேறு கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், பென்மலை வேலாயுதசுவாமி கோவில்,

பொள்ளாச்சி:''கிணத்துக்கடவு வழித்தடத்தில் ரயில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., தாமோதரன் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், பல்வேறு கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், பென்மலை வேலாயுதசுவாமி கோவில், முத்துமலை முருகன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் அமைந்துள்ளன. இங்கிருந்து, ஆயிரக்கணக்கானவர்கள் கல்வி கற்கவும், பணி நிமித்தமாகவும் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர். ஆனால், கிணத்துக்கடவுக்கு போதுமான ரயில் வசதி இல்லை.தற்போது, இரண்டு ரயில்கள் மட்டுமே கிணத்துக்கடவில் நின்று செல்கின்றன. பொதுமக்கள் நலன் கருதி, கிணத்துக்கடவு வழியே, மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோட்டில் இருந்து 'மெமு' அல்லது மின்ரயில்கள் இயக்க வேண்டும்.காரைக்காலுக்கு, போத்தனுார் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி - திண்டுக்கல் - திருச்சி - தஞ்சை வழியே நேரடி ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும். இதே வழித்தடத்தில், கோவை - மயிலாடுதுறை இடையிலான இரவு நேர எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும். சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X