ஓணம் பண்டிகை; காய்கறிகள் விலை உயர்வு; தொடர் மழையால் வரத்து குறைவு

Added : செப் 05, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும் 31க்கும் மேற்பட்ட வாரச்சந்தைகளில் காய்கறிகள் விற்பனை
ஓணம் பண்டிகை; காய்கறிகள் விலை உயர்வு;   தொடர் மழையால் வரத்து குறைவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள மார்க்கெட்களில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில், எட்டுக்கும் மேற்பட்ட பிரதான காய்கறி சந்தை மற்றும் 31க்கும் மேற்பட்ட வாரச்சந்தைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், ஓணம் பண்டிகை மற்றும் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் நடந்த சந்தைகளில், விற்பனையான காய்கறிகளின் விலை நிலவரம்:ஒரு கிலோ தக்காளி 25 - 35 ரூபாய்; பாகற்காய் 30 - 37; புடலை 25 - 30; வெண்டைக்காய், 25 - 30; பச்சை மிளகாய், 55 - 65; சின்ன வெங்காயம், 28 - 35; பெரிய வெங்காயம், 20 - 25; முள்ளங்கி, 15 - 20; கேரட், 75 - 90 ரூபாய்க்கு விற்றது.மேலும், சுரைக்காய், 20 - 25; பீர்க்கன், 35 - 40; அவரைக்காய், 30 - 35; முருங்கை 25 - 30, உருளை 45 - 55 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் காய்கறிகளின் விலை கிலோவுக்கு, ஐந்து முதல் 15 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ததால் காய்கறிகளின் வரத்து, 25 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், ஓணம் பண்டிகை வருவதால், காய்கறிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.இதனால், ஐந்து முதல் பத்து ரூபாய் வரையில் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம், 14 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, வரத்து குறைவால் இந்த வாரம், 30 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.பச்சை மிளகாய் கிலோவுக்கு, 10 ரூபாய், கத்தரிக்காய் கிலோவுக்கு, ஐந்து ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து விலை உயரும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X