மெகா தடுப்பூசி முகாம்மக்கள் ஆர்வம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 800க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், 35வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்காக, மாவட்டத்தில், 1,341 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.இதில், உடுமலை வட்டாரத்தில், 601 பேர் கோவிஷீல்டு; கோவாக்சின், 65 பேர் செலுத்திக்கொண்டனர். இதே
மெகா தடுப்பூசி முகாம்மக்கள் ஆர்வம்

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில், 800க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், 35வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்காக, மாவட்டத்தில், 1,341 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.இதில், உடுமலை வட்டாரத்தில், 601 பேர் கோவிஷீல்டு; கோவாக்சின், 65 பேர் செலுத்திக்கொண்டனர். இதே போல், மடத்துக்குளம் வட்டாரத்தில், கோவிஷீல்டு, 175; கோவாக்சின், 26 பேர் செலுத்தினர். இரு வட்டாரத்திலும், நேற்று 867 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதே போல், நகரப்பகுதியிலும், குடிமங்கலம் தடுப்பூசி முகாம் நடந்தது.


வால்பாறை


வால்பாறை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் எளிதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், 50 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்த தடுப்பூசி முகாமில், மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, முதல், இரண்டாம் 'டோஸ்' மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். வால்பாறை தாலுக்காவில்ஒரே நாளில், 686 பேருக்கு ஊசி செலுத்தப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இம்மாதம், 30ம் தேதி வரை மட்டுமே இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்பதால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் அருகில் உள்ள சுகாதார மையங்களில் ஊசி செலுத்திக்கொள்ளலாம்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X