கணவரை கொன்று நாடகம்: காதலனுடன் மனைவி கைது| Dinamalar

கணவரை கொன்று நாடகம்: காதலனுடன் மனைவி கைது

Added : செப் 05, 2022 | |
கோனனகுன்டே-பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ், 30. இவரது மனைவி ஷில்பா, 27. திருமணத்துக்கு முன்பே, ஷில்பாவுக்கும், சந்தோஷ், 29 என்பவருக்கும் இடையே காதல் இருந்தது. பெற்றோர் எதிர்ப்பால், மகேஷை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னும், காதலனுடன் தொடர்பில் இருந்தார்.இந்நிலையில் கடந்த 2ம் தேதி காதலன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, அவர் உடலை
கணவரை கொன்று நாடகம்: காதலனுடன் மனைவி கைது



கோனனகுன்டே-பெங்களூரு கோனனகுன்டேவைச் சேர்ந்தவர் மகேஷ், 30. இவரது மனைவி ஷில்பா, 27. திருமணத்துக்கு முன்பே, ஷில்பாவுக்கும், சந்தோஷ், 29 என்பவருக்கும் இடையே காதல் இருந்தது. பெற்றோர் எதிர்ப்பால், மகேஷை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னும், காதலனுடன் தொடர்பில் இருந்தார்.இந்நிலையில் கடந்த 2ம் தேதி காதலன் உதவியுடன் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, அவர் உடலை மாண்டியாவுக்கு காரில் கொண்டு சென்றார். அங்கு வலிப்பு நோயால் உயிரிழந்து விட்டதாக, கணவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.மாமனார், மாமியார் பார்த்த போது, மகன் கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால், மாண்டியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதில், மகேஷ் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. மனைவியிடம் போலீசார் 'கிடுக்கிபிடி' விசாரணை நடத்தினர். அவர் கூறுகையில், “எனக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லை. அதனால் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தேன். வலிப்பு நோயால் இறந்ததாக நாடகமாடினேன்” என, தெரிவித்தார்.மனைவி, காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X