செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 05, 2022 | |
Advertisement
ஊர்வலத்தில் நுாபுர் சர்மா பேனர்மைசூரு: மைசூரின் ராஜேந்திரா நகரில் உள்ள 101 கணபதி கோவில் சார்பில் நேற்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சாவர்க்கர் பிளக்ஸ் பேனர்கள் கொண்டு செல்லப்பட்டன. இத்துடன் பா.ஜ., பிரமுகர் நுாபுர் சர்மா பேனரும் இடம் பெற்றிருந்தது.அரசு உத்தரவு ரத்துபெங்களூரு:


ஊர்வலத்தில் நுாபுர் சர்மா பேனர்



மைசூரு: மைசூரின் ராஜேந்திரா நகரில் உள்ள 101 கணபதி கோவில் சார்பில் நேற்று விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சாவர்க்கர் பிளக்ஸ் பேனர்கள் கொண்டு செல்லப்பட்டன. இத்துடன் பா.ஜ., பிரமுகர் நுாபுர் சர்மா பேனரும் இடம் பெற்றிருந்தது.


அரசு உத்தரவு ரத்து


பெங்களூரு: கர்நாடகாவில் பி.பி.எல்., கார்டு வைத்துள்ள ஏழைகளுக்கு 75 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மாநில அரசு கடந்த மாதம் 28ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்களுக்கு பணமில்லா சிகிச்சை


பெங்களூரு: அரசு ஊழியர்களுக்கு பணமில்லா சிகிச்சை வழங்கும் ஆரோக்கிய பாக்யா திட்டத்தை, நாளை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைக்கிறார். இதன் மூலம் 30 லட்சம் ஊழியர்கள் பயனடைய உள்ளனர். 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் கிடைக்கும். இத்திட்டத்துக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் தோறும் 1 சதவீதம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.


டி.சி.பி., கார் மீது விழுந்த மரம்


பெங்களூரு: பெங்களூரு ஜெயநகர் தெற்கு மண்டல டி.சி.பி., கிருஷ்ண காந்த், 40. இவர் நேற்று இன்னோவா காரில் அலுவலகத்துக்கு வந்தார். காரை விட்டு இறங்கி சென்ற ஐந்து நிமிடத்தில் அதன் மீது பெரிய மரம் விழுந்தது. டி.சி.பி., இறங்கிய பின்னர் டிரைவர் உள்ளே அமர்ந்திருந்தார். மரம் விழும் நேரத்தில் போன் வந்ததால் பேசுவதற்காக வெளியில் வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


ஜமீர் அகமது கான் விநாயகர் ஊர்வலம்


பெங்களூரு: பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அகில கர்நாடக ஜமீர் அகமது கான் கூட்டமைப்பு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X