மின் வசதி இல்லாத அங்கன்வாடி மையம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
சூணாம்பேடு--கல்பட்டு அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சூணாம்பேடு அருகே கல்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது அங்கன்வாடியில் பொறுத்தப்பட்டிருந்த மின் இணைப்பு
மின் வசதி இல்லாத அங்கன்வாடி மையம்



சூணாம்பேடு--கல்பட்டு அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சூணாம்பேடு அருகே கல்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது அங்கன்வாடியில் பொறுத்தப்பட்டிருந்த மின் இணைப்பு கம்பிகள் சிதலமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.தற்போது மீண்டும் அங்கன்வாடி மையம் செயல்பட தொடங்கிய நிலையிலும் பழுதடைந்த மின் இணைப்பு கம்பிகள் சீரமைக்கபடாமலே உள்ளதால் அங்கன்வாடி மையம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மின் இணைப்பு இல்லாததால் பகல் வேளைகளில் வெயிலின் தாக்கம் காரணமாக குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.மின் வசதி இல்லாததால் பெற்றோர்களும் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிதலமடைந்த மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X