சிதிலமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : செப் 05, 2022 | |
Advertisement
மறைமலை நகர் --பேரமனூர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை நகர் - திருக்கச்சூர் செல்லும் சாலை 5 கி. மீ., துாரம் உள்ளது. இதில் 1 கி. மீ., நீளமான சாலை 3 மாதங்களுக்கு முன் அகலப்படுத்தி புதிதாக அமைக்கப்பட்டது. மீதமுள்ள சாலை பல இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் பேரமனூர் சிவன் கோவில் அருகே சாலை மிகவும்
சிதிலமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை



மறைமலை நகர் --பேரமனூர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை நகர் - திருக்கச்சூர் செல்லும் சாலை 5 கி. மீ., துாரம் உள்ளது. இதில் 1 கி. மீ., நீளமான சாலை 3 மாதங்களுக்கு முன் அகலப்படுத்தி புதிதாக அமைக்கப்பட்டது. மீதமுள்ள சாலை பல இடங்களில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் பேரமனூர் சிவன் கோவில் அருகே சாலை மிகவும் மோசமாகவும், பெரிய பெரிய பள்ளங்களுடன் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பேரமனூர், திருக்கச்சூர்,சட்டமங்களம், பகுதிகளில் இருந்து செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கடந்த வாரம் பெய்த மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே சிதிலமடைந்த சாலையை புதிதாக அமைக்க வேண்டும் அல்லது மராமத்து பணிகள் மேற்கொண்டு சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X