செங்கையில் வீட்டு குடிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில்!: முறைகேடுகளை தவிர்க்க நகராட்சி தீவிரம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு,--செங்கல்பட்டு நகராட்சியில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், முழுமையாக செயல்படுத்தப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. முறைகேடுகளை தவிர்க்க, நகராட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள், திருமண


செங்கல்பட்டு,--செங்கல்பட்டு நகராட்சியில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், முழுமையாக செயல்படுத்தப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. முறைகேடுகளை தவிர்க்க, நகராட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் என, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது.இவர்களுக்கு, நகரையொட்டி உள்ள பழவேலி, மாமண்டூர் பாலாற்று கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் வாயிலாக, தினமும் 45 லட்சம் லிட்டர் குடிநீர், நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில்சேமிக்கப்படுகிறது.இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, தினமும், 5 லட்சம் லிட்டர் தண்ணீர், கட்டணத்துடன் வினியோகம் செய்யப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் முறையாக, குடிநீர் கட்டணம் செலுத்தி வருகிறது.பொதுக்குழாய்களில் தண்ணீர் பிடிப்போரில் சிலர் முறைகேடாக, பொது குழாயில் பிளாஸ்டிக் குழாய் இணைத்து, அவற்றை தங்கள் வீடுகளுக்குள் கொண்டு சென்று தண்ணீர் பிடிக்கின்றனர்.இதுஒருபுறம் இருக்க, வீடுகளில் குழாய் இணைப்பு பெற்றவர்கள், திருட்டுத்தனமாக மோட்டார் வாயிலாக, தண்ணீர் எடுக்கின்றனர். குடிநீருக்கு மட்டுமல்லாமல், அவற்றை குளிக்கவும், அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், குடிநீர் வீணாவதுடன், மற்றவர்களுக்கும் கிடைக்காத நிலை உள்ளது.இதை தடுக்க, நகராட்சி நிர்வாகம், 2018ம் ஆண்டு, அனைத்து வீடுகளுக்கும், கட்டாய குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிட்டனர்.இந்த திட்டத்தில், ஒரு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க, 7,500 ரூபாய் செலுத்தலாம் என, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதைத் தொடர்ந்து, 8,094 பேர், இணைப்பு பெற்று, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன், குடிநீர் இணைப்பு, வீடுகளுக்கே செல்வதுடன், தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டு நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.இதில், மற்றவர்கள், குடிநீர் இணைப்பு பெறாமல் உள்ளனர்.

இவர்களையும், குடிநீர் இணைப்பு பெற, நகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, அனைவரும் குடிநீர் இணைப்பு பெற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகராட்சி பகுதியில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு பெற அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவிற்கு பின், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வருகிறோம்.ஒரு சில வீட்டு உரிமையாளர்கள், ஆழ்துளை கிணறு வாயிலாக குடிநீர் பயன்படுத்துவதால், 'இணைப்பு வேண்டாம்' என, கூறுகின்றனர்.குடிநீர் இணைப்பு பெறாதவர்களிடம், குடிநீர் அவசியத்தை கருதியும், முறைகேடுகளை தவிர்க்க வேண்டியும், இணைப்பு பெற வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X