மாமல்லை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Added : செப் 05, 2022 | |
Advertisement
விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகள், நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர், பொது இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சதுர்த்தி வழிபாட்டைத் தொடர்ந்து, மூன்றாம் நாளில் இருந்து, மாமல்லபுரம்
மாமல்லை கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு


விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகள், நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர், பொது இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சதுர்த்தி வழிபாட்டைத் தொடர்ந்து, மூன்றாம் நாளில் இருந்து, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில், குறைவான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மறைமலை நகர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள், லாரி, டிராக்டர் ஆகிய வாகனங்களில், மாமல்லபுரம் கடற்கரைக்கு, நேற்று காலையில் இருந்து கொண்டு வரப்பட்டன.விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வந்தவர்களிடம், போலீசார் டோக்கன் வழங்கி, கடற்கரைக்கு அனுமதித்தனர். அங்கு சிலையை வழிபட்டு, போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில், சிலையை கடலில் மூழ்கடித்தனர். வெளிநாட்டுப் பயணியர், சிலை வழிபாடு, கடலில் கரைப்பு குறித்து கேட்டறிந்து வியந்தனர். புகைப்படம், வீடியோ எடுத்தனர்.சிலைகள் ஏற்றி வந்த வாகன நகர்வையும், சாலை போக்குவரத்தையும், போலீசார் தொடர்ந்து கண்காணித்து ஒழுங்குபடுத்தினர். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்பாடுகள் செய்தது. சதுரங்கப்பட்டினம், கடலுார், வடபட்டினம், தழுதாளிகுப்பம், ஆலம்பரை குப்பம் ஆகிய பகுதிகளிலும், சிலைகள் கரைக்கப்பட்டன.ஹிந்து முன்னணி மாநில செயலர் ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சிலை கரைப்பை பார்வையிட்டனர். போலீஸ் எஸ்.பி.,சுகுணாசிங், மாமல்லபுரம் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கப்பட்டதுஇது குறித்து ஹிந்து முன்னணி தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மாடம்பாக்கம், பெருமாட்டுநல்லுார், நீலமங்கலம், ஆதனூர், கூத்தனுார் ஆகிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் வாகனங்களில் கொண்டு வந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைத்திருந்தோம் .

பின் ஊர்வலம் ஜி. எஸ்.டி., சாலை வழியாக தாம்பரம் வந்து, தாம்பரம் பாலம் வழியாக கிழக்கு தாம்பரம் வந்து கேம்ப் ரோடு மேடவாக்கம், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், வழியாக பாலவாக்கம் சென்று பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் சிங்காரவேலன் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 15 விநாயகர் சிலைகள், மதுராந்தகம் தேரடி வீதியில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்து, காத்தான் கடை அருகே உள்ள கடலுார் கிராம குப்பத்தில் விஜர்சனம் செய்தனர். மதுராந்தகம் டி.எஸ்.பி., தலைமையில், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

--நமது நிருபர் குழு-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X