சாலையோர நிலங்களை ஏலம் விட திட்டம்?சி.எம்.டி.ஏ., அவசரம் காட்டுவதால் சிக்கல்!

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை-வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையை ஒட்டிய, ௧௬௪ அடி அகல நிலத்தை ஏலம் விட்டு வருவாய் ஈட்ட, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வராமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல, வெளிவட்ட சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., தொலைவுக்கு சாலை



சென்னை-வண்டலுார் - மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையை ஒட்டிய, ௧௬௪ அடி அகல நிலத்தை ஏலம் விட்டு வருவாய் ஈட்ட, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வராமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் செல்ல, வெளிவட்ட சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சாலைக்காக, ௪௦௦ அடி அகலத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், ௨௩௬ அடி அகல பகுதி சாலைகள், ரயில் பாதை அமைக்க ஒதுக்கப்பட்டன. எஞ்சிய, ௧௬௪ அடி அகல பகுதி எதிர்கால வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது.இந்த, ௧௬௪ அடி அகல பகுதியை பயன்படுத்தி, மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. வணிக ரீதியான திட்டங்கள் வந்தால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது வெளிவட்ட சாலையின் அடிப்படை நோக்கத்தை குலைத்துவிடும் என்று புகார் எழுந்தது.வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கலந்தாலோசகர்கள் பரிந்துரை அடிப்படையில் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, சி.எம்.டி.ஏ., தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக வேறு கோணத்தில் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நிதித்துறை செயலர் தலைமையில், சமீபத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், வெளிவட்ட சாலையின் எதிர்கால வளர்ச்சிக்கான, ௧௬௪ அடி அகல நிலத்துக்கு சந்தை நிலவர அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும்.இந்த நிலங்களை 'இ - ஏலம்' வாயிலாக உரிய நபர்களுக்கு ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம். இதற்கென பிரத்யேக 'சாப்ட்வேர்' உருவாக்க வேண்டும்.இதற்கு அப்பால், 2 கி.மீ., வரையிலான காலி நிலங்கள், சி.எம்.டி.ஏ., பெயருக்கு ஒதுக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, வெளிவட்ட சாலையை ஒட்டிய, ௧௬௪ அடி அகலத்தில், 300 ஏக்கர் நிலம் ஏலத்துக்கு வரும் என கூறப்படுகிறது.வெளிவட்ட சாலைக்காக வழங்கிய நிலத்தை வேறு நோக்கத்துக்கு பயன்படுத்தினால், பழைய உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். நிலத்தை மீண்டும் எங்களுக்கே தர வேண்டும் என்று கேட்டால், சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்படும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அவசரம் காட்டுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X