அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar

அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் 'அட்மிட்'

Added : செப் 05, 2022 | |
புதுச்சேரி-உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வரும் 8ம் தேதி பிறந்த நாள் விழா வருகிறது. அதனையொட்டி, அவரது ஆதாரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.இதில், அமைச்சர் நமச்சிவாயம்



புதுச்சேரி-உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வரும் 8ம் தேதி பிறந்த நாள் விழா வருகிறது. அதனையொட்டி, அவரது ஆதாரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.இதில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். தொடர் நிகழ்ச்சியார் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அரும்பார்த்தபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சளி அதிகமாகி உடல் நிலை பாதித்தது. உடன் மூலகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஓய்வின்றி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மற்றும் ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X