தென்பெண்ணையில் வெள்ளம் ஏற்பட்டும் பயனில்லை: பம்பை ஆற்றுக்கு தண்ணீர் வராத அவலம்

Added : செப் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதிலும், பம்பை ஆற்றில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலுாரில் கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டில்
தென்பெண்ணையில் வெள்ளம் ஏற்பட்டும் பயனில்லை: பம்பை ஆற்றுக்கு தண்ணீர் வராத அவலம்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோதிலும், பம்பை ஆற்றில் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலுாரில் கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து பம்பை ஆறுபிரிகிறது.அங்கிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 49 கி.மீ., துாரம் சென்று, புதுச்சேரி மாநிலம் அம்மனங்குப்பம் அருகே வராக நதியில் இணைகிறது.பம்பை ஆறு கால்வாய் மூலம், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காங்கியனுார், பள்ளியந்துார், தென்னமாதேவி, அய்யூர் அகரம், கப்பியாம்புலியூர், தொரவி உள்ளிட்ட 24 ஏரிகளுக்கு ஆற்று தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.இந்த ஆற்று பாசனத்தை நம்பி, 2,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆறு, பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளதால், பம்பை ஆறு முழுதும் முட்புதர்கள் மண்டி காடு போன்று உள்ளது.மேலும், பல இடங்களில் மணல் திருட்டு நடந்துள்ளதால், ஆற்றில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, பம்பை ஆற்றின் கரைகள் பல இடங்களில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் கடந்த ஒரு வாரமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வெள்ளப்பெருக்கால் பம்பை ஆற்றில் தண்ணீர் வரவில்லை.இதனால் பம்பை ஆறு வழக்கம் போல் வறண்டு காணப்படுகிறது.

தென்பெண்ணை ஆற்றில் பல லட்சம் கன அடி தண்ணீர் சென்ற போதும், பம்பை ஆற்றில் தண்ணீர் வராதது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.எனவே, பம்பை ஆற்றுப் பகுதியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆற்றை துார் வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரைகளை பலப்படுத்தி தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிகளுக்கு கொண்டுவர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-செப்-202202:26:05 IST Report Abuse
Chinnappa Pothiraj அமைச்சர்களும் ஆட்சியாளர்களும் படோபடோபமாக ஊடகங்கள்,பத்திரிக்கைகளிள் கரைவேட்டியைகட்டிக்கொண்டிக்கொண்டு தம்பட்டம் தற்பெருமையைபறைசாற்றுவதை நிரறுத்தி கிராமந்தோரும் சென்று உண்மைநிலவரத்தை கண்டறிந்து மக்களின்(நிலத்தை அபகறிக்காமல்) நலனைக்கருத்தில்கொண்டு ஆக்கபூர்வநடவடிக்கை சூழ்நிலைக்குதகுந்தவாறு காலதாமதமில்லாமல் செயல்படுத்தவேண்டும்.இந்த நிலைக்கு காரணமென்ன,வறட்சியை ஏற்படுத்தி விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்தபணத்தின்மூலம் அரசியல்வாதிகள் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த முன்னோட்ட செயல்பாடுகளா? நாடு நலம்பெற பொதுவாழ்க்கையிலிருப்போர் அறம் சார்ந்த நாட்டின் முன்னேற்றத்திற்காண செள்களில் ஆக்கபூர்வமாக செயல்படுங்கள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-செப்-202207:33:20 IST Report Abuse
duruvasar திராவிடர்கள் பெருமைபட்டுகொள்ள வேண்டிய விசயம். இந்தியாவில் வேறு எந்த மாநிலதிலாவது இந்த சாதனையை செய்து காட்டியிருகிரார்களா? வெள்ளம் ஓடுகிற ஆற்றின் ஒரு பகுதிக்கு ஒரு சொட்டு நீர் கூட போகவிட்டாமல் செய்து திராவிட மாடல் அரசு சாதனை புரிந்திருக்கிறது. இந்த மாதிரியான சரித்திர நிகழ்வுகளை பற்றி விவாதம் வைக்க எந்த ஊடகமும் முன்வராது. ஏன் எனில் அனைத்தும் பிற்போக்கு சக்திகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X