டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு; 3,236 இடத்திற்கு 7,000 ஆசிரியர்கள் பங்கேற்பு

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : ஆசிரியர் பதவியில், 3,236 பேரை நியமிக்க, முதல் முறையாக, 7,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றுள்ளது.அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளில் உள்ள, 2,207 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், இந்த ஆண்டு பிப்ரவரியில், கணினி வழி தேர்வு நடந்தது.
டிஆர்பி, சான்றிதழ், ஆசிரியர்கள் ,TRB, Certificate, Teachers,


சென்னை : ஆசிரியர் பதவியில், 3,236 பேரை நியமிக்க, முதல் முறையாக, 7,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றுள்ளது.அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளில் உள்ள, 2,207 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், இந்த ஆண்டு பிப்ரவரியில், கணினி வழி தேர்வு நடந்தது.

இதில், 2.5 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.தேர்வு முடிவு ஜூலையில் வெளியானது. பின், இந்த தேர்வின் வழியே நியமிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 3,236 ஆக உயர்த்தப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தரவரிசை பட்டியல் வெளியானது.பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, முதல் கட்டமாக ஆன்லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.


latest tamil news



இதையடுத்து, தேர்வர்களின் அசல் சான்றிதழ்களை நேரடியாக சரிபார்க்கும் பணி, இம்மாதம், 2ம் தேதி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் துவங்கியது.இந்த பணிகளை மேற்கொள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, அவசர ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு மருத்துவர் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு, தேர்வர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

டி.ஆர்.பி., தலைவர் லதா மேற்பார்வையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி துறையை சார்ந்த, 400 பேர் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.டி.ஆர்.பி., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, மூன்று நாட்களில் 7,000 பேருக்கு, நேரடியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன.

நேற்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு பெற்றது.ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோருக்கு, இதுவரை மாவட்ட கல்வி அலுவலகங்களே சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொண்டன. ஆனால், முதல் முறையாக டி.ஆர்.பி., சார்பில் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.அதேபோல, ஆசிரியர் பணிக்கு டி.ஆர்.பி., சார்பில் கணினி வழி தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு நியமனம் செய்யப்படுவதும் இதுவே முதல் முறை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-செப்-202209:00:31 IST Report Abuse
Bhaskaran இதிலேயும் போலி சான்றிதழ் இருக்கப்போவுது
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
05-செப்-202208:49:29 IST Report Abuse
சீனி சான்றிதழ் போலியெனில், சரி பார்த்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X