வேளாண்மை உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.அரசு செயலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, கலெக்டர் ஷ்ரவன்குமார், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் கார்த்திகேயன்,
வேளாண்மை உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம்



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.அரசு செயலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, கலெக்டர் ஷ்ரவன்குமார், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் கார்த்திகேயன், உளுந்துார்பேட்டை மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால், வேளாண்மை தொடர்பான திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு முன் மாதிரி மாவட்டமாக உருவாக்கிட வேண்டும். குறிப்பாக அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு விரைந்து கொண்டு சேர்த்திடும் பணியை கலெக்டர் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.தொடர்ந்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டமானது வேளாண் திட்டங்களுக்கு முன்னிரிமை அளிக்கக்கூடிய மாவட்டமாக இருந்து வருகிறது. கரும்பு உற்பத்தியை ஒப்பிடுகையில் நெல் உற்பத்தியை சற்று அதிகரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இம்மாவட்டத்தில் மலைப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுவதால், சிறுதானிய சிறப்பு மண்டலங்களாக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலுார், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார் ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வராயன்மலைப் பகுதியில் மலைப்பயிர்கள் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசின் அனைத்து வேளாண் தொடர்புடைய திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுவதுமாக கொண்டு சேர்த்திட பணியாற்ற வேண்டும்' என்றார்.தொடர்ந்து வேளாண்மைத் துறை 6.7 லட்சம் ரூபாய், தோட்டக்கலைத் துறை 65.5 லட்சம், வேளாண்மைப் பொறியியல் துறை 35.63 லட்சம், வேளாண் வணிகத்துறை 21.64 லட்சம், என மொத்தம் 183 பயனாளிகளுக்கு 1 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நலத்துறை இயக்குனர் பிருந்தா தேவி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், கூடுதல் சர்க்கரைத்துறை ஆணையர் அன்பழகன், வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X