மகாசக்தி மாரியம்மன் கோவிலில் 8ம் தேதி கும்பாபிேஷகம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-நீலமங்கலத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகத்திற்கான திருப்பணிகள் நடந்தது. இப்பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து வரும் 7 மற்றும் 8ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.அதனையொட்டி, நாளை 6ம் தேதி காலை மகா கணபதி யாகம்



கள்ளக்குறிச்சி-நீலமங்கலத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் 150 ஆண்டுகள் பழமையான மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகத்திற்கான திருப்பணிகள் நடந்தது. இப்பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து வரும் 7 மற்றும் 8ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.அதனையொட்டி, நாளை 6ம் தேதி காலை மகா கணபதி யாகம் துவங்குகிறது. 7ம் தேதி காலை கோவில் வளாகத்தில் உள்ள கங்கையம்மன், பெரியாண்டவருக்கு யாகம் நடத்தப்பட்டு, காலை 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, மகா மாரியம்மனுக்கு 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து, கடம் பறப்பாடாகி காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகாசக்தி மாரியம்மன் மற்றும் வளாகத்தில் நவநீத கிருஷ்ணன், பெரியநாயகி அம்மன், காத்தவராயன், பாவாடைராயன் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X