மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு

Added : செப் 05, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் பொதுமக்கள் மிகுந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.உளுந்துார்பேட்டையில் போலீஸ் நிலையம் அருகே விருத்தாசலம் சாலை சந்திப்பு பகுதியில் நேற்று மாலை 5:00 மணியளவில் உயர் மின்னழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம்



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் பொதுமக்கள் மிகுந்த பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.உளுந்துார்பேட்டையில் போலீஸ் நிலையம் அருகே விருத்தாசலம் சாலை சந்திப்பு பகுதியில் நேற்று மாலை 5:00 மணியளவில் உயர் மின்னழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர்.பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. உடன், அப்பகுதியில் இருந்தவர்கள் மின் கம்பி அருகே யாரும் சென்று விடாத வகையில் தடுத்து நிறுத்தினர்.தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். பின், மின் கம்பியை சீரமைத்து மின் விநியோகம் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X