வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சிறப்பு முகாம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,272 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இதில், ஒரு சில வாக்காளர்களின் பெயர் ஒன்றுக்கும்



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,272 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது.மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.இதில், ஒரு சில வாக்காளர்களின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சில தினங்களாக நடந்து வருகிறது.வாக்காளர்களின் வசதிக்காக மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 1,272 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகலினை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து இணைத்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X