டில்லி மாடல் பள்ளிகள் திட்டம், புதுமைப்பெண் திட்டம் இன்று துவக்கம்| Dinamalar

'டில்லி மாடல் பள்ளிகள்' திட்டம், புதுமைப்பெண் திட்டம் இன்று துவக்கம்

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (10) | |
சென்னை : தமிழக அரசு பள்ளிகளில், 'டில்லி மாடல் பள்ளிகள்' திட்டமும், கல்லுாரி மாணவியருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டமும் இன்று துவக்கப்படுகிறது.புதுமைப் பெண் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினும்; டில்லி மாடல் பள்ளிகள் திட்டத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துவக்கி வைக்கின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த
Pudhumai Penn, Delhi Model School, டில்லி மாடல் பள்ளி, புதுமைப்பெண், தமிழக அரசு,  TN Govt,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக அரசு பள்ளிகளில், 'டில்லி மாடல் பள்ளிகள்' திட்டமும், கல்லுாரி மாணவியருக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' திட்டமும் இன்று துவக்கப்படுகிறது.



புதுமைப் பெண் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலினும்; டில்லி மாடல் பள்ளிகள் திட்டத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துவக்கி வைக்கின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் மகளிர் திருமண உதவித்திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில், 'தாலிக்கு தங்கம்' திட்டமாக மாற்றப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.



அதற்கு பதில், பள்ளி படிப்புக்கு பின் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு மட்டும், மாதம் 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.




60 ஆயிரம் பேர்


இந்த திட்டத்தில், உதவி தொகை பெற விரும்பும் மாணவியரின் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டன. அதன்படி, அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, நடப்பு கல்வி ஆண்டில், இளநிலை படிப்பில் இரண்டு, மூன்றாம் ஆண்டு மாணவியர் என, 2.5 லட்சம் உதவித்தொகை கோரி பதிவு செய்துள்ளனர்.அவர்களில் முதற்கட்டமாக 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் உதவி தொகை வழங்கப்பட உள்ளது.



அதேபோல, நடப்பு கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டு இளநிலை படிப்பில் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்படும்.இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் என, தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. புதுமைப்பெண் திட்டம் இன்று தமிழக அரசால் துவங்கப்பட உள்ளது.



latest tamil news



புதிய கல்வி கொள்கை


கடந்த ஆட்சியில், தமிழகத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த பள்ளிகள், தற்போதைய தி.மு.க., ஆட்சியில், தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள் என, பெயர் மாற்றப்பட்டுள்ளன.



டில்லியில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளை பின்பற்றி, அந்த மாடலில், இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள், இந்த பள்ளிகளில் பின்பற்றப்பட உள்ளன.இந்த திட்டத்தில், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் என, மொத்தம் 41 பள்ளிகள் 'டில்லி மாடல்' பள்ளிகளாக செயல்பட உள்ளன.



சென்னை பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு நடக்கும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, புதுமைப்பெண் திட்டத்தை துவங்கி வைக்கிறார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாடல் பள்ளி திட்டங்களை துவங்கி வைக்கிறார்.விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, மகேஷ் மற்றும் துறை அலுவலர்களும், மாணவ - மாணவியரும் பங்கேற்க உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X