1,500 ஏக்கர் நிலம் திருப்பி தர கடிதம்

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை : சேலம் உருக்காலைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், பயன்படுத்தப்படாத, 1,500 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரும்படி, ஆலை நிர்வாகத்திற்கு, தொழில் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலத்தில் உள்ள இரும்பு உருக்காலை, ஆண்டுக்கு, 3.39 லட்சம் டன் இரும்பு தயாரிக்கும் திறன் உடையது. இந்த ஆலைக்காக, தமிழக அரசு, 3,500 ஏக்கருக்கும் அதிகமான



சென்னை : சேலம் உருக்காலைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், பயன்படுத்தப்படாத, 1,500 ஏக்கர் நிலத்தை திரும்பத் தரும்படி, ஆலை நிர்வாகத்திற்கு, தொழில் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேலத்தில் உள்ள இரும்பு உருக்காலை, ஆண்டுக்கு, 3.39 லட்சம் டன் இரும்பு தயாரிக்கும் திறன் உடையது.

இந்த ஆலைக்காக, தமிழக அரசு, 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வழங்கியது. அவற்றில், 1,500 ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் உள்ளது. இந்த நிலத்தை திரும்ப வழங்கக் கோரி, ஆலை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பிஉள்ளது. அவ்வாறு பெறப்படும் நிலத்தை, வேறு தொழிற்சாலைகள் அமைக்கவும், கூடுதல் முதலீடுகளை பெறவும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X