மத்திய அரசு திட்ட விளம்பரம்: கருணாநிதி படத்தால் சர்ச்சை

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (76) | |
Advertisement
ஈரோடு : மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில், முன்னாள் முதல்வரின் படம், ஹிந்தி இடம் பெற்றிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாநகராட்சி பகுதியில், சாலையோரங்களில் கடை அமைத்து பூ, காய்கறி, பழங்கள், உணவு வகை விற்பனை செய்வோர், கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக, விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது.தேசிய நகர்புற வாழ்வாதார
மத்திய அரசு, விளம்பரம், கருணாநிதி, Central Government, Advertising, Karunanidhi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஈரோடு : மத்திய அரசு நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில், முன்னாள் முதல்வரின் படம், ஹிந்தி இடம் பெற்றிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில், சாலையோரங்களில் கடை அமைத்து பூ, காய்கறி, பழங்கள், உணவு வகை விற்பனை செய்வோர், கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக, விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது.தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், இந்த வண்டி தயாரிப்புக்கான தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு, 1.05 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக அமைச்சர் முத்துசாமி, 40 விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு மே 30ம் தேதி வழங்கினார். தற்போது மேலும், 83 விற்பனை வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்க, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வண்டிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் ஹிந்தியில், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மத்திய அரசு நிதியில் பயனாளிகளுக்கு வழங்கும் விற்பனை வண்டியில் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் படம் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படம் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது?அரசு நிதியில் வழங்கும் வண்டியை கட்சி வண்டியாக மாற்றி விட்டனர்.பிரதமர், மத்திய அமைச்சரின் படத்தை ஏன் இடம் பெற செய்யவில்லை?அதுபோல ஹிந்தி திணிப்பை விமர்சித்து தார் பூசி அழிப்போர், இந்த வண்டியில் உள்ள ஹிந்தி வாசகங்களை கண்டு கொள்ளாதது ஏன்? இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-செப்-202219:31:39 IST Report Abuse
NicoleThomson அய்யா குழந்தை உங்களோடது தானே என்று ஒரு படத்தில் வடிவேலு கேட்பார் ஏனோ நினைவுக்கு வந்து சொல்லுது
Rate this:
Cancel
RRR - Nellai,இந்தியா
05-செப்-202219:21:34 IST Report Abuse
RRR தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பதுதான் கேடுகெட்ட தீயமுக அரசின் ஒரே நோக்கம். ஸ்டிக்கர் ஒட்டியது மக்களுக்கு தெரிந்தாலும் அதைப்பற்றி இந்த விடியாமூஞ்சி அரசு கவலைப்படுவது இல்லை. ஏனென்றால் தீயமுக அரசுக்கு வெக்கம் மானம் எதுவும் எப்போதுமே கிடையாது...
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
05-செப்-202218:27:30 IST Report Abuse
Dharmavaan மெட்ராஸ் கோர்ட் இதை தடை செய்யுமா .இல்லை வழக்கம் போல்.வழுக்குமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X