மாணவர் இறப்பதற்கு முன் உரையாடியது என்ன?

Added : செப் 05, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
சக மாணவியின் தாய் கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து இறந்த மாணவர் பாலமணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சையின் போது, உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ பதிவில் உள்ள உரையாடல் வருமாறு:உறவினர்: மாணவியின் வீடு எங்கு உள்ளது.மாணவர்: வேட்டைக்காரன் வீதியில் உள்ளது.உறவினர்: உன் வீடு
குளிர்பானம், மாணவர் ,பாலமணிகண்டன், Soft drink, Student, Balamanikandan,

சக மாணவியின் தாய் கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து இறந்த மாணவர் பாலமணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சையின் போது, உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவில் உள்ள உரையாடல் வருமாறு:உறவினர்: மாணவியின் வீடு எங்கு உள்ளது.மாணவர்: வேட்டைக்காரன் வீதியில் உள்ளது.உறவினர்: உன் வீடு எங்குள்ளது?.
மாணவர்: ஹவுசிங் போர்டுஉறவினர்: அந்த மாணவியை பள்ளியில் அழைத்து விசாரித்தார்களா?
மாணவர்: தெரியலயே
உறவினர்: செக்யூரிட்டி பெயர் என்ன?
மாணவர்: தெரியவில்லை. அங்கில் என்று தான் கூப்பிடுவோம். உறவினர்: ரொம்ப நாளாக வேலையில் உள்ளாரா?மாணவர்: கொஞ்ச நாளாகத் தான் உள்ளார். உறவினர்: என்ன கூல்ட்ரிங்ஸ் கொடுத்தார்கள்?மாணவர்: புருட்னிக்உறவினர்: அட்டை டப்பாவா? பாட்டிலா?

மாணவர்: பாட்டில்

உறவினர்: முழுதும் குடித்தீர்களா?
மாணவர்: 2 பாட்டில் கொடுத்தார்கள். ஒன்றை முழுவதுமாக குடித்தேன். மற்றொன்றை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டேன்.

உறவினர்: இதற்கு என்ன செய்ய வேண்டும். கூல்ட்ரிங்ஸ் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
மாணவர்: ஆம். எந்த மாணவருக்கும் இதுபோன்று ஏற்படக்கூடாது. மார்க்கிற்காக கொலை செய்ய முயற்சிக்கக்கூடாது.

உறவினர்: இதை அதிகாரிகள், அமைச்சர்கள் கேட்டால் சொல்வீர்களாமாணவர்: சொல்வேன்.இவ்வாறு மாணவர் பாலமணிகண்டன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தன் உறவினர்களிடம் உரையாடி உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07-செப்-202203:58:10 IST Report Abuse
NicoleThomson இப்படியும் ஒரு பெண்மணி ? அவளின் மகள் அதற்க்கு மேல் , இவளை ஆதரிக்கும் கட்சிக்கும் , மத தலைவர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் இவள் கையால் கூல் ட்ரிங்க்ஸ் கொடுங்க , அவர்களின் பிள்ளைகளோடு இவளின் மகளை படிக்க வையுங்க
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
05-செப்-202219:39:58 IST Report Abuse
கதிரழகன், SSLC நாவரசுவை ஹோமோ சித்திரவதை செஞ்சு கொலை செஞ்சு தலையை தூண்டிச்சு சாக்கு மூட்டையில் பஸ்ஸில் போட்டான் ஒரு கொடூரன் ஜான் டேவிட். அவனுக்கு வக்காலத்து வாங்கி நன்னடத்தை சரிட்டிபிகேட் எல்லாம் கொடுத்து விடுதலை பண்ணிட்டாக ஆயர் பேராயர் எல்லாரும். சென்னை உயர் அநீதி மன்றம் செஞ்ச கொடுமை இது. இவங்களுக்கு பின்னாடி போலீஸ் அதிகாரிங்க வக்கீலுங்க நீதி அரசருங்க எல்லாரும் ஸ்லீப்பர் செல்லா வேலை செய்யுராக. பாருங்க மீடியா நியூஸ் கவனம் அடுத்த பக்கம் போனாவுட்டு கமுக்கமா விடுதலை ஆயி வந்துடுவாங்க.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
05-செப்-202217:16:52 IST Report Abuse
jagan நடப்பது நம்ம பிச்சையில் வந்த ஆட்சி தானே பாத்துக்கலாம் , என்று நினைத்திருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X