சர்ச் கட்டுமான அனுமதி வழக்கு தள்ளுபடி : உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 05, 2022 | |
Advertisement
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடுச்சாலை புதுாரில் கிறிஸ்தவ சர்ச் கட்டுமானத்திற்கு அனுமதி மறுத்த கலெக்டரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.களக்காடு பாதிரியார் சுவாமிதாஸ் தாக்கல் செய்த மனு: நடுச்சாலை புதுாரில் சர்ச் கட்டுமானம் துவக்கினோம். சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் அனுமதி பெற்றோம். திருநெல்வேலி




மதுரை : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நடுச்சாலை புதுாரில் கிறிஸ்தவ சர்ச் கட்டுமானத்திற்கு அனுமதி மறுத்த கலெக்டரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

களக்காடு பாதிரியார் சுவாமிதாஸ் தாக்கல் செய்த மனு:
நடுச்சாலை புதுாரில் சர்ச் கட்டுமானம் துவக்கினோம். சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் அனுமதி பெற்றோம். திருநெல்வேலி எஸ்.பி.,சேரன்மாதேவி ஆர்.டி.ஓ.,நாங்குனேரி தாசில்தார் ஆய்வு செய்தனர். திருநெல்வேலி கலெக்டரின் அனுமதி பெறாமல் கட்டுமானத்தை தொடர முடியாது, என்றனர். சர்ச் கட்டுமானத்திற்கு அனுமதிக்க கலெக்டரிடம் மனு அளித்தோம். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி நிராகரித்தார். அது சட்டவிரோதம். ரத்து செய்து, அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுவாமிதாஸ் மனு செய்தார்.
நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: கிராமத்தில் 1977 முதல் பிரார்த்தனை நடக்கிறது. தனியார் வீட்டில் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தால் எவ்வித சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை என தெரிவித்தது.தமிழக அரசு தரப்பு: உண்மை நிலையை பரிசீலித்து விரிவான விசாரணை நடந்தது. இக்குக்கிராமம் கோவிலம்மாள்புரம் கிராமத்தின் ஒரு பகுதி. இங்கு 180 ஹிந்து குடும்பங்கள் மற்றும் 10 கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததால் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், எனத் தெரிவித்தது.
நீதிபதி உத்தரவு: மனுதாரர் தரப்பில் நடுச்சாலை புதுாரில் 21 சென்ட் நிலம் வாங்கியதில் எந்த சர்ச்சையும் இல்லை. கட்டுமானப் பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளார். தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகள்படி, கலெக்டரின் அனுமதியின்றி வழிபாடு அல்லது மத நோக்கத்திற்காக கட்டடம் கட்டுவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்தக்கூடாது. அவரின் முன் அனுமதி பெறாமல் மனுதாரர் கட்டுமான பணியை துவக்கியுள்ளார்.சில அமைப்புகள் மற்றும் மக்களின் ஆட்சேபனையின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
கட்டுமானப் பணியை நிறுத்திவிட்டு, கலெக்டரிடம் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அனுமதி வழங்க அல்லது மறுக்க கலெக்டருக்கு விருப்புரிமை உண்டு. அவரிடம் அனுமதி பெறுவது வெறும் சம்பிரதாய நடைமுறை அல்ல. அந்த இடம், கட்டடத்தை பயன்படுத்துவதால் பொது அமைதி, ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுமா என கலெக்டர் கருத்து தெரிவிக்க வேண்டும். இவ்வழக்கில் பல புகார்களை கருத்தில் கொண்டு கிராமத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என சப்-கலெக்டர் அறிக்கை அளித்துள்ளார்.
180 ஹிந்து குடும்பங்கள், 10 கிறிஸ்தவக் குடும்பங்கள் வசிக்கும் குக்கிராமத்தில் அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது என, கலெக்டர் கண்டறிந்துள்ளார்.மத சுதந்திரத்திற்கான உரிமை எப்போதும் பொது ஒழுங்கிற்குட்பட்டது. தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X