12.28 லட்சம் பேருக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி

Added : செப் 05, 2022 | |
Advertisement
சென்னை : தமிழகத்தில், நேற்று நடந்த 35வது சிறப்பு தடுப்பூசி முகாமில், 12.28 லட்சம் பேருக்கு கொரேனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, 35வது தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில், 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடந்தன. சென்னையில் நடந்த முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.நேற்று நடந்த முகாமில், 12 வயதுக்கு



சென்னை : தமிழகத்தில், நேற்று நடந்த 35வது சிறப்பு தடுப்பூசி முகாமில், 12.28 லட்சம் பேருக்கு கொரேனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக, 35வது தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில், 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடந்தன. சென்னையில் நடந்த முகாமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.நேற்று நடந்த முகாமில், 12 வயதுக்கு மேற்பட்ட 12.28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 78 ஆயிரத்து 337 பேருக்கு முதல் தவணை; 2.91 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை; 8.59 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை, 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39 சதவீதம் பேர் முதல் தவணை; 90.61 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்ததால், இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடக்காது என, பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X