மூத்த அரசியல்வாதியான உங்களால கண்டுபிடிக்க முடியலையா?

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகம் முழுதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடவும், பிளஸ் 1ல் அந்த பிரிவுகளில் சேர்ந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது, வருத்தம் அளிக்கிறது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடத்த ஆசிரியர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. அதற்கு காரணம் ஆசிரியர்
ராமதாஸ், சண்முகநாதன், ராஜு, Ramadoss, Shanmuganathan, Raju,

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகம் முழுதும் அரசு மேல்நிலை பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடவும், பிளஸ் 1ல் அந்த பிரிவுகளில் சேர்ந்த மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது, வருத்தம் அளிக்கிறது. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடத்த ஆசிரியர்கள் இல்லை என்பதை ஏற்க முடியாது. அதற்கு காரணம் ஆசிரியர் பற்றாக்குறையாக இருக்க முடியாது. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது.

எங்கேயோ இடிக்குதுன்னு சொல்றீங்க... அது என்னன்னு, மூத்த அரசியல்வாதியான உங்களால கண்டுபிடிக்க முடியலையா?


வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேச்சு: ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., ஆகியவை, இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும், புனிதமானது; அனைத்து மக்களும், ரத்த சகோதரர்கள் என்ற உணர்வை வலியுறுத்துகின்றன.

இந்த தேசம் உருவாக, எண்ணற்ற தியாகிகள் ரத்தம் சிந்திஉள்ளனர்... ஆனால், எதையுமே செய்யாத சிலரை தான், தமிழக அரசியல்வாதிகளில் சிலர் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.


அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு பேட்டி: தலைமை குறித்து அ.தி.மு.க., தொண்டர்களிடம் குழப்பம் நீடித்த நிலையில், நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு, கட்சியின் வெற்றிச் சரித்திரத்தில் மற்றுமொரு மகுடம். தொண்டர்களின் குழப்பம் நீங்கி உள்ளது. இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி, ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். 100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டுமானால், காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்வதில் தவறில்லை. கட்சியை காப்பாற்றி வழி நடத்த நல்ல, 'கேப்டன்' வேண்டும். அப்படிப்பட்டவரான பழனிசாமியை தான் தற்போது கேப்டனாக்கி உள்ளோம்.


latest tamil news



அது சரி... சேர்த்த சொத்துக்களை காப்பாற்ற வேண்டுமே என்ற அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர்களின் ஆதங்கம் புரிகிறது!


சென்னையில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரி ஜூடித் ராவின் பேச்சு: இந்தியாவும், அமெரிக்காவும் வலிமை வாய்ந்த நட்பு நாடுகள். இதனால், புத்தாக்கம், தொழில்நுட்பம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி காரணமாக, சர்வதேச அளவில் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக உருவெடுத்து வருகிறது. இரு நாடுகளிடையே, கடந்த 10 ஆண்டுகளில் வர்த்தகம் சார்ந்த புரிந்துணர்வு மேம்பட்டு வருகிறது. கூடுதல் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் கால் பதிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

அமெரிக்க நிறுவனங்கள் இன்னும் அதிகமாக கால் பதிக்கத் தான் இப்படி ஓவரா 'ஐஸ்' வைக்குறீங்களா?



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
05-செப்-202220:43:04 IST Report Abuse
JaiRam அமெரிக்க நிறுவனங்கள் கால்வைத்த இடம் அதோ கதி பெண்கள் ஒழிங்கீனமாவார்கள் ஆண்கள் அயோக்கியானவர்கள் அதுதான் பெண் உரிமை
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
05-செப்-202216:40:46 IST Report Abuse
BALU டாக்டர் ஐயா திமுக-வின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் சைலண்ட் மோடில் தான் இருப்பார்.ஏனைனில் அவர் செய்து கொண்ட டீலிங் அப்படி
Rate this:
Cancel
தமிழரசன் விழுப்புரம் ராமதாஸ் சொல்வதை அவரின் பாமக கட்சி காரனுங்களே கேட்க மாட்டானுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X