தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று மட்டுமே: 4 நாட்களாக வெற்றி நடை போடும் ஷாப்பிங் திருவிழா| Dinamalar

தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று மட்டுமே: 4 நாட்களாக வெற்றி நடை போடும் ஷாப்பிங் திருவிழா

Updated : செப் 05, 2022 | Added : செப் 05, 2022 | |
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவிற்கு இணையாக மக்கள் மனம் கவர்ந்த தினமலர், ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள் வெற்றி நடை போட்டது. இன்றோடு நிறைவு பெறுவதால் இனி ஷாப்பிங் திருவிழாக்களின் நாயகனை அடுத்த ஆண்டு தான் காண முடியும். இன்றே நம்ம கண்காட்சி நடக்கும் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள
dinamalar, shoppingexpo, madurai, smartshoppers, Dinamalardaily ஷாப்பிங், திருவிழா,

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவிற்கு இணையாக மக்கள் மனம் கவர்ந்த தினமலர், ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ் இணைந்து வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி 4 நாட்கள் வெற்றி நடை போட்டது. இன்றோடு நிறைவு பெறுவதால் இனி ஷாப்பிங் திருவிழாக்களின் நாயகனை அடுத்த ஆண்டு தான் காண முடியும். இன்றே நம்ம கண்காட்சி

நடக்கும் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மாநகராட்சி

மைதானத்திற்கு வந்திருங்க.மதுரையில் என்ன தான் மழை பெய்தாலும் வியர்வை தாங்க முடியலைனு சொல்ற அளவிற்கு ரொம்ப ஹாட்டா தான் இருக்கு. ஆனால், நம்ம கண்காட்சி அரங்கிற்குள் வந்துட்டீங்கன்னா சும்மா குளு,குளு ஏ.சி.,யில் ஜில்லுன்னு ஆயிடுவீங்க. ஆமாங்க... 250 ஸ்டால்களும் ஜில் ஜில் தான்...பெண்களின் பேஷன் உலகம்

மும்பை, டில்லி, பெங்களூரு... இவ்வளவு ஏன் சிங்கப்பூர், அமெரிக்காவில் கிடைக்கும் ரெடி மேட் டிரஸ், பேஷன் மெட்டீரியல்ஸ், சாரீஸ், பேஷன் ஜூவல்லரி, அழகுசாதன பொருட்கள், காலணி, பேன்ஸி பேக், நெயில் பாலிஷ் என கண்காட்சியில் கிடைக்குது. இளம் பெண்களுக்காக ஒரு பேஷன் உலகமே இங்கே பார்க்கலாம். அழகிய கைகளில் இலவசமாக டிசைனர் மெகந்தி வரையலாம்.வீட்டு உபயோகப் பொருட்கள்


வீட்டு உபயோகப் பொருட்கள் என்ற பெயருக்கு ஏற்ப கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, சேர், ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, ஸ்மார்ட் போன், அலங்கார விளக்குகள், கதவு ஸ்கிரீன், கிச்சன், கேட்ஜட்ஸ் உட்பட பல பொருட்களை அள்ளலாம். கார், டூவீலர்கள், கட்டுமான பொருட்களுக்கு ஸ்பெஷல் ஸ்டால் உண்டு. கார், டூவீலர் பார்க்கிங் வசதி இருக்கு.
மெகா டேஸ்ட்டி புட் கோர்ட்


முதலில் ஷாப்பிங், அப்புறம் கேம்ஸ், நெக்ஸ்ட் டேஸ்ட். அட அதாங்க புட் கோர்ட் பக்கம்

வந்திருங்க... மட்டன், சிக்கன் பிரியாணி சுடச்சுட காத்திருக்கும். கோலா உருண்டை, சிக்கன் லாலி பாப், பானிபூரி, பணியாரம், இட்லி, தோசை, வகைகள், பாப்கார்ன், ஸ்பைரல் சிப்ஸ் எல்லாம் ருசிக்கலாம். தரமான, நியாயமான விலையில் கொடுக்குறாங்க, ஸ்டால்களில் சினாக்ஸ், கோன் ஐஸ், குல்பி, சான்ட்விச் ஒரு கை பார்க்கலாம்.
போத்தீஸ் கேம் ஸோன்


போத்தீஸ் கேம் ஸோன் குழந்தைகளின் இதயங்களை கொள்ளை கொள்ளும்... அங்கே பேட்டரி கார், வாட்டர் போட், பொம்மை ரயில், வாட்டர் ரோலிங், பன் சிட்டி, 9டி கேம்ஸ் விளையாடி கலக்கலாம். மேஜிக் ஷோ கூட நடக்குது. ஒட்டக சவாரி செம ஹைலைட். பலுான்கள் இலவசம்.


கண்காட்சியை இணைந்து வழங்குவோர்: அனிதா ஸ்டோர்ஸ், தேனி ஆனந்தம், அல்ட்ரா பெர்பெக்ட் மேட், நேஷனல் ஜூட் போர்டு, பானோசோனிக் முத்து, உட் ஸ்பா பர்னிச்சர்ஸ், இன்டீரியர்ஸ், கோவை லட்சுமி, கயல் அக்ரோ புட்ஸ். ஆம்புலன்ஸ் உதவி: அப்போலோ மருத்துவமனை.இன்று மட்டும்


கண்காட்சி நேரம் காலை 11:00 - இரவு 9:00 மணி


மாநகராட்சி மைதானம் (எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகில்)மாட்டுத்தாவணி, மதுரை.


250 'ஏசி' ஸ்டால்கள் கட்டணம் ரூ.50 (6 வயதுக்கு மேல்) முகக்கவசம் அணிந்து வரவும்தினமலர் ஷாப்பிங் உலகில் சுற்றி பார்த்து ஒவ்வொரு பொருட்களையும் ரசித்து வாங்கி, சிறப்பு உணவு மெனுக்களை ருசித்து சாப்பிட்ட அனுபவம் குறித்து பெண்கள் மனம் மகிழ்ந்து கூறுகின்றனர்.நாள் முழுக்க சுற்றி பார்க்கலாம்


நஸ் ரீனா: தினமலர் எக்ஸ்போவிற்கு வந்தா ஒரு நாள் முழுக்க சுற்றி பார்த்து என்ஜாய் பண்ணலாம். ஜக்லிங் பார்த்ததில் ரொம்ப ஹேப்பி.
கலை பொருட்கள்


தர்ஷினி: பர்னிச்சர் ஒர்க்ஸ் ரொம்ப நல்லா இருக்குது. ஸ்டாலில் கிருஷ்ணன், ராதை சேர்ந்து இருக்கிற மாதிரி சிற்பம் பார்த்தேன். அதில் அவ்வளவு அழகா கலை நுணுக்கங்கள் பண்ணியிருந்தாங்க. இந்த மாதிரி கலை நயம் மிகுந்த பொருட்கள் இங்க இருக்கும்னு நான்

எதிர்பார்க்கவே இல்லை.
மாயா ஜாலம் அற்புதம்


கனிமொழி: புட் கோர்ட் போலாம்னு போகும்போது மேடையில் என்னதான் பண்ணுறாங்கனு எட்டிபார்த்தா எல்லாருக்கும் பிடிச்ச மாஜிக் செய்து அசத்திட்டு இருக்காங்க. எனக்கு அவங்க பண்ணதுல பாக்ஸ் உள்ள இருந்து பூ வந்தது பிடிச்சிருந்துச்சு.
டிரஸ் கலெக் ஷன் வேற லெவல்


ஸ்ரேயா : ஹோம் மேட் சாக்லேட் டேஸ்ட் சூப்பரா இருந்தது. ஸ்நாக்ஸ் அயிட்டம்ஸ் நிறைய இருக்குது. சுவையும் நல்லா இருந்தது. நார்த் இந்தியன் டிரஸ் கலெக் ஷன் வேற லெவல். ஊறுகாய் இவ்வளவு வகைகள் இருக்குதுனு தினமலர் எக்ஸ்போக்கு வந்ததுக்கு அப்புறம்

தான் தெரியும்.
நிறைய பிராண்ட் இருக்குது

மீனாட்சி: ஹோம் இன்டீரியர், கிச்சன் பொருட்களில் நிறைய பிராண்ட் இருந்தது. எனக்கு

பிடிச்ச பட்டர்பிளை கம்பெனி பொருட்களை நான் வாங்குனேன். ஐஸ்கீரீம் மில்க் ேஷக்ஸ் டேஸ்ட் நல்லா இருந்தது.
சிமிலேட்டர் பைக் ரேஸ்


நிலேஷ் முகுந்தன்: எனக்கு பைக் ரேஸ் ரொம்ப பிடிக்கும். கேம் ேஸானில் சிமிலேட்டர் கேம்ல ரேஸ் கேம் விளையாடினேன். நானே ரியல்லா வண்டி ஓட்டிக்கிட்டு போகுற பீல் இருந்துச்சி. ரொம்ப ேஹப்பியா இருந்தேன் விளையாடும் போது.
டிரையின் ரைடு


அவந்திகா: டிரையின் ரைடு செம ஜாலியா இருந்தது. அம்மா, அப்பாவுக்கு டாட்டா சொல்லிக்கிட்டே டிரைன்ல போனேன். என்னோட ரைடு வந்தவங்க கூட சேர்ந்து நானும் நல்லா என்ஜாய் செய்தேன்.தேங்ஸ் டு தினமலர்


ஆர்த்தி: என் பையன்கூட சேர்ந்து நானும் பைக் ரைடு போனேன். பொதுவா எங்கேயும் குழந்தைங்களோட விளையாட அனுமதிக்க மாட்டாங்க. ஆனால் நம்ம தினமலர் எக்ஸ்போவில் அனுமதிக்கிறாங்க. தேங்ஸ் தினமலர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X